சென்னை: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார்.
தமிழகத்தில் கடந்த 2024 பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார். விஜய் கட்சி தொடங்கியதும் தனது இலக்கு 2026 என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதன்படி, தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலை நோக்கி தத்தமது பணிகளை தொடங்கி தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தவெக கட்சியும் தேர்தலை நோக்கி தனது பயணத்தை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. விஜய்யின் செயல்பாட்டை மற்ற முக்கிய அரசியல் கட்சிகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றது. இந்த தேர்தலில் டிவிகே கட்சித்தலைவர் விஜய் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, டிவிகே கட்சியின் பதிய உறுப்பினர் சேர்க்கை செயலியை இன்று அக்கட்சித்தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த செயலிக்கு மை டிவிகே என பெயரிடப்பட்டுள்ளது. இதனை பனையூரில் உள்ள டிவிகே கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் வெளியிட்டுள்ளார். இந்த செயலியை தொடங்கி வைத்த பின்னர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டையை விஜய் வழங்கினார். இதன்மூலம் குடும்பம் குடும்பமாக பொதுமக்களை டிவிகேவில் உறுப்பினர்களாக இணைப்பதற்காக அக்கட்சி முன்னெடுத்துள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
{{comments.comment}}