தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

Nov 03, 2025,05:37 PM IST

சென்னை: கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது. 




கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

news

கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

news

'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!

news

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்