சென்னை : 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி என அனைத்து அரசியல் கட்சிகளும் பேசி வரும் நிலையில், இரண்டு கட்சிகளிடையே தான் போட்டி என நாகை பிரச்சார சுற்றுப் பயணத்தின் போது விஜய் பேசி உள்ளார். அப்படியானால் அதிமுக உடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பை விஜய் இன்னும் கையில் வைத்துள்ளாரா? இந்த பேச்சு அதிமுக.,விற்கு விடப்படும் மறைமுக கூட்டணி தூதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம், அதிமுகவை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லையோ கேள்வியையும் அது எழுப்பியுள்ளது. அதிமுகவை களத்திலேயே இல்லை என்பது போல சித்தரிக்க விஜய் முயல்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திருச்சியை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக நாகை புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் தனது பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். இதை தான், டிசம்பர் 20 வரை ஒவ்வொரு வாரமும் செய்ய போவதாக விஜய் முன்பே அறிவித்து விட்டாரே. இது என்ன முக்கியமான விஷயமா என கேட்கிறீர்களா? கண்டிப்பாக நாகையில் விஜய் பேசிய பேச்சு மிக மிக முக்கியமானதாக பார்க்க வேண்டியது தான்.
திருச்சி, அரியலூரில் விஜய் பேசிய பேச்சுக்களையும், இன்று நாகையில் அவர் பேசிய பேச்சையும் ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை அனைவருக்கும் புரியும். தமிழகத்தில் அரசியல் களம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதை விஜய் மறைமுகமாக உணர்த்தியுள்ளார் என்பதும் புரியும்.
திருச்சியில் ஆரம்பித்திலேயே திமுக, பாஜக.,வை மிக கடுமையாக விமர்சித்து பேசினார் விஜய். பீகார் ஓட்டு திருட்டு விவகாரத்தை கையில் எடுத்து பாஜக.,வை தாக்கி பேசினார். அதற்கு பிறகு தான் திருச்சி பகுதி பிரச்சனைகள் பற்றி பேசினார். இதையே தான் கிட்டதட்ட அரியலூரிலும் பேசினார். இதன் மூலம் திமுக, பாஜக.,வை விஜய் கடுமையாக எதிர்க்கிறார் என்பது புரிந்தது. இதனால் பாஜக.,வுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக.,வையும் அவர் ஏற்க தயாராக இல்லை என்பதும் புரிந்தது.
ஆனால் இன்று நாகையில் விஜய் பேசிய பேச்சில் நிறைய மாற்றங்கள் இருந்ததை நன்கு கவனித்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். தனது பேச்சின் துவக்கத்தில் வழக்கம் போல பாசிச பாஜக என்ற விமர்சனத்தை வைத்தார். இருந்தாலும் "மோடி, அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தால் இப்படி கட்டுப்பாடுகள் விதிப்பீர்களா? கரென்ட், மைக் வயர் கட் செய்வீர்களா? செய்து தான் பாருங்களேன். அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும்" என பேசினார். இதன் மூலம் பாஜக.,வை பார்த்து திமுக பயப்படுகிறது என்பதை மறைமுகமாக கூறி விட்டார். அதற்கு பிறகு பாஜக பற்றி அவர் வாய் திறக்கவே இல்லை. மாறாக தன்னுடைய பிரச்சார பயணத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பற்றியும், திமுக பற்றியும் மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.
அதை விட முக்கியமாக விஜய் குறிப்பிட்டது, "2026 தமிழக சட்டசபை தேர்தலில் இரண்டு கட்சிகளிடையே தான் போட்டி. ஒன்று திமுக, மற்றொன்று தவெக" என பேசி உள்ளார். இதை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். அதிமுக-பாஜக கூட்டணியை விஜய் போட்டியாகவே கருதவில்லை என்றும், அதிமுகவை தனியாக இழுத்து தனிக் கூட்டணியில் இணையலாமா என்ற யோசனையில் விஜய் இருக்கிறார் என்றும் இரு வேறு விதமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், முதல் மாநாட்டிலேயே கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என விஜய் ஓப்பனாக அறிவித்தும் கூட இதுவரை எந்த ஒரு சிறிய கட்சியும் கூட விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவில்லை. இதனால் விஜய் தனித்து போட்டியிடலாம் என சொல்லப்பட்டது.
ஆனால் தனித்து போட்டியிட்டு முதல் தேர்தலிலேயே 18 சதவீதம் ஓட்டுக்களை பெற்று, அனைவராலும் விஜயகாந்த் ஆகி விட முடியாது என்பதை விஜய் தற்போது புரிந்து கொள்ள துவங்கி உள்ளார். விஜய் தற்போது வரை தனித்து இருப்பதால் மட்டுமே அவரது பிரச்சாரங்களுக்கு கட்டுப்பாடு மேல் கட்டுப்பாடு, அவர் மீதும் கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்கு மீது வழக்குகளும் போடப்படுகிறது. இருந்தாலும் தவெக மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்து கண்டனம் கூட எந்த கட்சியும் தெரிவிக்கவில்லை. இதுவே ஏதாவது ஒரு கூட்டணியில் தவெக இருந்தால், உடனடியாக கண்டன குரல்கள் எழுந்திருக்கும்.
அரசியலில் ஆரம்பத்திலேயே தனித்து விடப்பட்டோமோ என விஜய் யோசிக்க துவங்கி இருக்கலாம். அது மட்டுமல்ல தவெக.,விற்கு எதிராக போலீசாரின் நடவடிக்கைகள் விஜய்யை மேலும் மேலும் கோபப்படுத்தி வருவதை அவரது சமீபத்திய பிரச்சார பேச்சுக்கள் எதிரொலிக்கின்றன. இது திமுக.,விற்கு எதிரான கோபமாக மாறி வருவதால் அதிமுக கூட்டணியை நோக்கி, சூழ்நிலைகள் விஜய்யை தள்ளி வருகிறது என்பதை உணர முடிகிறது. திருச்சியிலும், அரியலூரிலும் உள்ளூர் பிரச்சனைகளை மட்டும் பிரதானமாக பேசிய விஜய், நாகையில் உள்ளூர் பிரச்சனைகளை பேசியதை விட, மிக கடுமையாக திமுக.,வையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் நேருக்கு நேராக தாக்கி பேசி உள்ளதில் இருந்தே தற்போதைய சூழ்நிலை விஜய்யை எந்த அளவிற்கு கோபப்படுத்தி உள்ளது என்பதை காட்டுகிறது.
அதோடு, இதே போல் நீங்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதித்தால், அனைத்தையும் மீற தான் தயங்க போவதில்லை. தடைகள் அனைத்தையும் மீறி மக்களை சந்திப்பேன் என்பதையும் திமுக.,விற்கு மறைமுகமாக கூறி உள்ளார் விஜய்.
திமுக ஆட்சியில்.. திருவாரூர் கருவாடாக காய்ந்து கிடக்கிறது.. தவெக தலைவர் விஜய்
நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஈழத்தமிழர்கள் நலம்.. தொண்டர்கள் கொடுத்த வேல்.. சீமானி்ன் ஆயுதங்களை கையில் தூக்கிய விஜய்!
முழுமையான அரசியல்வாதியாக மாறிய விஜய்.. நேரடித் தாக்குதல் பேச்சால் கிளம்பிய பரபரப்பு!
மும்பையில் மோனோ ரயில் சேவை நிறுத்தம்.. மக்கள் தவிப்பு ..அடுத்தடுத்து ரிப்பேர் ஆனதால் நடவடிக்கை
தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்
பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஆப்பு.. விசிக பானைக்காக போராடியது இதுக்குதான்!
2026ல் 2 கட்சிகளிடையே தான் போட்டியா?.. அதிமுக குறித்துப் பேசாத விஜய்.. மறைமுக அழைப்பா?
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
{{comments.comment}}