சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவைத் தாண்டிய நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலனுக்கு என்னாச்சு என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல்தான் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினி உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் ரஜினிகாந்த்தின் இதயத்திற்குச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்ததால் அதைச் சரி செய்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ரஜினிகாந்த்துக்கு இதய ரீதியிலான பிரச்சினை ஏற்பட்டது உறுதியானது.
இந்த நிலையில் அப்பல்லோ அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து தற்போது விஜய் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
எனக்கும் கடிதம் வந்தது!
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
{{comments.comment}}