ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

May 22, 2026,04:08 PM IST

- உமாராணி சங்கரலிங்கம்


அருட்பெருஞ்ஜோதி.

ஓம் நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.


ஜூலை 6,2022.

புதன் கிழமை.


பஞ்சதரணியில் இரவு tent இல் படுத்திருக்கும் போது செந்தில் தம்பி இரவு படுத்திருக்கும் போது அக்கா,அக்கா எனக் கூப்பிட சட்டென நான் விழித்து என்ன என்று கேட்க ,அக்கா " மழை பெய்கிறது. தண்ணீர்  tentக்குள் கீழே வந்து தரை எல்லாம் ஈரமாகி விட்டது .bag எல்லாம் தரையில் தான் இருக்கிறது. நனைந்து விடப் போகிறது எனக் கூற. எல்லோரும் உடனே விழித்து எழுந்து bag ஐ கட்டில் மேலே வைத்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து இருந்தோம்.


அடுத்த நாள் எப்படி என எண்ணிக் கொண்டே படுத்து விட்டோம்.  மழை பெய்து கொண்டே இருந்தது. காலையில் மழை விட்டு விடப் பயணம் செல்ல அனுமதித்தனர்.  நாங்கள் கிளம்பி 8 மணிக்கு அருகிலேயே இருந்த  லங்காவில் பருப்பு சாதம்,நல்ல காரமாக சூடாக இருந்தது ,சாப்பிட்டோம். 9 மணிக்குக் கிளம்பினோம். 




2 குதிரைகள் தான் முதலில் கிடைத்தன. நானும் தேவசேனாவும் ஆளுக்கு ஒரு குதிரையில் ஏறிக் கொண்டோம். குதிரையில் ஏறியதும் நமசிவாய மந்திரம் அடுத்து காப்புப்பாடல் பாடினேன். என் குதிரையின் பெயர் பாதல். குதிரைக்காரனின் பெயர் இர்ஃபான். தேவியின் குதிரைக்காரனின் பெயர் இம்ரான்.


நாங்கள் செல்ல ஆரம்பிக்கும் போது எதிரே வந்த 2 குதிரைக்காரர்களை நிறுத்தி என்னுடைய bagஐக் காட்டி இதே போல் bag வைத்திருப்பவர்களை அழைத்து வருமாறு கூற அவர்கள் என் கணவரையும் , அன்பு மணி அண்ணாவையும் அழைத்து வந்தனர். Bag identification சரியாக இருந்ததால் குதிரைக்காரர்கள் அவர்களை ஏற்றிக் கொண்டு வந்தனர். அதிகமான traffic jam. மிகக் கடினமான பயணம். மலை மேலே ஏற வேண்டியது இருந்தது. 


நாங்கள் போகும் குதிரை இடது புறம்.வலதுபுறம் பக்கத்தில் டோலியில் தூக்கி செல்பவர்கள், தரிசனம் முடித்து விட்டு எதிரே  குதிரைகளில் வருபவர்கள், அடுத்து நடப்பவர்கள். நாம் குதிரையில் இருக்கும் போது நமக்கு இடது புறம் அதல பாதாளம். குதிரைக்காரன் என்னை இடதுபுறம் பார்க்காதே எனக்கூறிக் கொண்டே வந்தான். ஓம் நமசிவாய மந்திரத்தை விடாமல் கூறிக்கொண்டே சென்றோம். குதிரைக்காரன் ,மாஜி,ஓகேவா எனக் கேட்டுக் கொண்டே வந்தான். ஒருவேளை பயம் என் முகத்தில் தெரிந்ததோ என்னமோ. 


நான் அவனிடம் பேசிக்கொண்டே வந்தேன். Traffic jam இல் குதிரைகள் நிற்கும் போது ஒருசில குதிரைகள் வாலுத்தனம் செய்து முன்னால் உள்ள குதிரைகள் முட்டுகிறது,அல்லது கடிக்கப் பார்க்கிறது. எனக்கு முன்னால் இருந்த குதிரை திரும்பிவிட்டது. பாவம் அதிலிருந்த பெண் ஒரே கத்தல். குதிரைக்காரன் சமாளித்து விட்டு திருப்பினான். மற்ற குதிரைக்காரர்கள் தங்கள் பயணியையும் பாதுகாத்து, மற்றவர்களுக்கும் help பண்ணுகிறார்கள். Really great.  


எனக்கு முன் சென்ற தேவசேனாவின் குதிரை பயந்து நேராகச் செல்லாமல் திரும்ப ஆரம்பிக்க, தேவசேனா மிகவும் பயந்து கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து  பின் ஏறிக் கொண்டார். டோலியில் தூக்கி வருபவர்கள் traffic jam இன் போது டோலியைக் கீழே இறக்கி வைத்து விடுகிறார்கள். Traffic jamஇன் போது ஜவான்கள் வந்து ஒழுங்கு படுத்தி அனுப்புகிறார்கள். அப்பப்பா இஷ்டப்பட்டு வந்த கடினமான பயணம். ஒருபுறம் பயம் இருந்தாலும்  ஈசனைக் காணப் போகிறோம் என மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதோ,அதோ வெகு தூரத்தில் சிறு சிறு கோடுகளாக 

மனிதர்கள் ,தூரத்தில் ஒரு குகை போன்ற அமைப்பு. அங்கு தான் ஈசன் பனி லிங்கமாகக் காட்சி அளிக்கிறார் என்றான் இர்ஃபான். 




நமக்கு இடது புறம் கீழே முழுவதும் மலைகளில் முழுவதும் பனி மூடிஇருந்து. சில இடங்களில் பனி உருகி நீரோட்டம் செல்கிறது. நடுவில் ஓரிடத்தில் பால்டால் எனுமிடத்திலிருந்து வரும் யாத்திரீகர்கள் நம்மோடு இணைந்து கொள்ள பயங்கர நெரிசல். உடனே ஜவான்கள் வந்து சரி செய்து விடுகிறார்கள்.சரியான பாதை இல்லாததால் மக்கள் கீழே இறங்கியும் மேலே ஏறியும் செல்கிறார்கள். 


என் கண்களில் முழுவதும் நீர். ஆஹா ,உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன். இன்னும் சிறிது தூரம் தான். குதிரையில் செல்பவர்களை மலைக்குச் சுமார் ஒன்றரைக் கிலோமீட்டர்  தூரத்திலேயே இறக்கி விடப்படுகின்றனர்.  டோலியில் செல்பவர்கள் மட்டும் குகையின் பக்கம் வரைச் செல்கின்றனர். நாங்கள் 12.30 க்குக் கீழே இறங்கியதும் பேசியது போக extra பணம் கொடுத்தோம். மிகவும் சந்தோஷப்பட்டான் இர்ஃபான்.


மாஜி, என்னை மறந்து விடாதீர்கள் என்று கூறி பாதலோடு போட்டோ எடுத்தான். அடுத்து சிறிது மலைபோன்ற இடத்திலிருந்து ஏறி மேலே சென்றோம் . இருபுறமும் கடைகள். தூரத்தில் ஈசன். சிறு சிறு தூறல்.  அடுத்ததில் ஈசனின் தரிசனத்தைப் பற்றி கூறுகிறேன்.


ஓம் நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.


பயணம் தொடரும்


(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்