டெல்லி: தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து இன்று இரண்டாவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் இரண்டாவது அமர்வு நேற்று நடைபெற்ற நிலையில் அக்கூட்டத்தில், தமிழக எம்பிக்கள் தமிழகத்திற்கு நீதி வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் கூச்சல் நீடித்தது. இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. இதனால் தமிழ்நாட்டு எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தமிழகத்திற்கு நிதியை தராமல் ஏமாற்றம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவமான பேச்சுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழ்நாட்டின் மொழியோடும், கல்வியோடும், உரிமையோடும், விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம். டெல்லியில் இருந்து ஆள்வதால் ஏதோ அவர் நமக்கு மேல் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் என தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தி திணிப்பு மற்றும் கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாட்டு எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவை தொடங்கியதுமே இன்றும் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டு எம்பிக்கள் கண்டன முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியை ஏற்கமாட்டோம்.. மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்...என தொடர் முழக்கமிட்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதில் திருமாவளவன், வைகோ, கனிமொழி, டி.ஆர் பாலு, என்.ஆர் இளங்கோ, நவாஸ் கனி ராபர்ட் புரூஸ், தமிழச்சி தங்கபாண்டியன், உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் கருப்புச்சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே நாடாளுமன்ற அவையில், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூபாய் 2,152 கோடியை ஒன்றிய அரசு தர மறுப்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும். மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த வேண்டும். கல்வி நிதியை தர மறுப்பதால் தமிழ்நாட்டில் 40 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாக உள்ளது. என திமுக எம்பி வில்சன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளார்.
திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு
தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!
கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!
Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?
Mumbai Indians.. என்ன கொடுமை சார் இது.. 13 வருஷமா இப்படியே நடந்திட்டிருந்தா எப்படி சார்!
தல, தல தான்... இளம் வீரர்களை மனம் திறந்து பாராட்டும் தோனி... ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 24, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}