மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று மதுரை வருகிறார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாயக்கர் பட்டி, அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 48 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இதனை அடுத்து டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சட்டப்பேரவை குளிர்காலகூட்டத் தொடரில் டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்காமல் அரிட்டாப்பட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரை மட்டும் தவிர்த்து பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த போராட்டத்திற்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.இந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதாகவும் அறிவித்தது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, மத்திய அரசு ரத்து முடிவை எடுக்கக் காரணமாக அமைந்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 26ம் தேதி அரிட்டாபட்டியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அரிட்டாபட்டிக்கு வந்த முதல்வர் அங்கு மக்கள் பிரதநிதிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி பகுதி கிராம மக்களை சந்திக்க உள்ளார். டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று மாலை நடைபெறவிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Navaratri 2026 Special: வருஷத்துக்கு நான்கு நவராத்திரி வரும்.. இது தெரியுமா உங்களுக்கு?
Cooking Tips: ராகி + பால் + நட்ஸ் கஞ்சி.. healthy food.. Tips by G Yasmin!
நம் மகளின் புன்னகையில் நல்வாழ்வு மலரட்டும்!
D Rajitha Poem.. கிடைக்காத பேருந்து!
நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!
Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை
மகன் .. அழகிய செடிக்கு மலரை அளிக்கும் உயிர் படைப்பு!
பெண்.. தலை நிமிர்ந்து நிற்கும் மிகப் பெரும் ஜோதி!
நட்பூ
{{comments.comment}}