டெல்லி: தமிழக சட்டமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்தி அமைச்சர் பியுஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் இணை பொறுப்பாளர்களாக அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது, பாஜகவைப் பொருத்தவரை தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. மேலும் சில கட்களுடன் கூட்டணியில் இணைக்க பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார். அதன்படி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இணை பொறுப்பாளர்களாக மத்திய சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் மத்திய விமான போக்குவரத்துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜெய்ந்த் பாண்டா நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனதிற்கு இனிய கணவன் கிடைக்க அருளும் அதிஅற்புத நோன்பு. பாவை நோன்பு....!
மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?
கார்த்திகை சோமவார (கடைசி திங்கட்கிழமை) சங்காபிஷேகம்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
{{comments.comment}}