சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 5 மற்றும் நவம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் UPI சேவை இயங்காது என்று ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி அறிவித்துள்ளது.
UPI என்பது Unified Payments Interface என்பதன் சுருக்கம். இதன் மூலம் தங்களின் ஸ்மார்ட்போன் வழியாக எளிய முறையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை யுபிஐ மூலம் அனுப்பலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை என்பது தற்போது மக்களிடம் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. ஏனெனில் மக்கள் சிறிய பொருள் முதல் தள்ளுவண்டிக் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் வரை அனைத்திற்கும் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்வதையே விரும்புகின்றனர். ஏனெனில் நேரடியாக பணத்தை கையாளுவதை தவிர்த்து ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்துவதை பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். இதனால் ஆன்லைன் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பொதுவாகவே தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் கடைகளுக்குச் சென்றால் நாம் வாங்க போகும் பொருட்கள் இருக்கிறதா என கேட்பதை தவிர்த்து, உங்கள் கடையில் gpay, பேடிஎம் இருக்கா என கேட்டு தான் கடைகளுக்குள்ளேயே செல்கிறார்கள். அதுமட்டுமின்றி தற்போது இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆடை அணிகலன் முதல் உணவுகள் வரை ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் UPI மிகவும் உதவிகரமாக உள்ளது. அந்த அளவுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக திகழ்கிறது.
இந்த நிலையில் ஹெச்டிஎப்சி வங்கி பராமரிப்பு பணி காரணமாக தனது ஆன்லைன் பரிவர்த்தனை சேவையை நவம்பர் ஐந்து மற்றும் நவம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு நாளுக்கு இயங்காது என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 5ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை 2 மணி நேரமும், நவம்பர் 23ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல் 3 மணி வரை மூன்று மணி நேரமும் என இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக பரிவர்த்தனைகள் இயங்காது.
HDFC mobile banking app, மற்றும் எச்டிஎப்சியுடன் இணைக்கப்பட்டுள்ள GPay, Paytm, phone pay, WhatsApp pay போன்ற எவ்வித ஆப்களும் இயங்காது. யுபிஐ சேவைகள் மட்டுமே வேலை செய்யாது தவிர மற்றபடி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகள் இயங்கும் என ஹெச்டிஎஃப்சி வங்கி இணையதளத்தில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}