வாஷிங்டன்: உலகளாவிய வரிகளை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபரின் சட்ட அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்று சொலிசிட்டர் ஜெனரல் ஜான் சாவர் கூறியுள்ளார். அதிபரின் வரிகள் தொடர்பான முழு சட்ட நிலையும் கூடிய விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக அதிபர் டிரம்ப், சரமாரியாக உலக நாடுகளுக்கு எதிராக விதித்து வந்த வரிகள் அவரது அதிகாரத்தை மீறிய செயல் என்று கீழமை நீதிமன்றம் கூறி, அந்த வரிவிதிப்புக்குத் தடை விதித்திருந்தது. அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் இந்த வரிகளை விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தான் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம், அரசு மறு ஆய்வு செய்ய கால அவகாசம் அளிக்கும் வகையில், அக்டோபர் நடுப்பகுதி வரை வரிகள் அமலில் இருக்கும் என்று கூறியுள்ளது.
40% வரி விதிப்புக்குள் வரும் Sin Goods.. காஸ்ட்லி கார்கள்.. சூப்பர் பைக்குகள்.. துப்பாக்கிகள்!
இந்தியா மீதான 50% வரியை எதிர்த்த உத்தரவு.. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் மேல்முறையீடு
விரைவில் நல்லது நடக்கும்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் எதை சொல்கிறார் தெரியுமா?
அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி
More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்
சென்னையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த தூய்மைப் பணியாளர்கள்.. கைது
Cricket: ரோஹித் சர்மாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் அமித் மிஸ்ரா!
Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!
அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?
{{comments.comment}}