ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

Sep 08, 2025,06:29 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை புரிஞ்சுக்கவே முடியலை. ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தையும் நடத்துகிறார்.. அவருக்காக உக்ரைனையும் மிரட்டுகிறார்.. மறுபக்கம் ரஷ்யா மீது பொருளாதாரத் தடையையும் விதிக்கிறார். இப்போது 2வது கட்ட பொருளாதாரத் தடை விதிக்கப் போதாக கூறியுள்ளார் டிரம்ப்.


அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட், ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க டிரம்ப் நிர்வாகமும் ஐரோப்பாவும் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்த சில நாட்களுக்குப் பிறகு டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்க நீங்கள் தயாரா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆமாம், நான் தயார்" என்று பதிலளித்தார். 




ஸ்காட் பெசன்ட், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக கூறினார். உக்ரைன் ராணுவம் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும், ரஷ்ய பொருளாதாரம் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்ற பந்தயத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக கூடுதல் தடைகளை விதித்தால், ரஷ்ய பொருளாதாரம் முழுமையாக சரிந்து, புடின் பேச்சுவார்த்தைக்கு வருவார் என்றும் அவர் கூறினார். 


இது மட்டும் இல்லாமல், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்க வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்தியாவுக்கு 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். என்னதான் வரி விதித்தாலும், பிரதமர் மோடி எனது நண்பர். அந்த நட்பு மாறாது என்றும் டிரம்ப் கூறி வருகிறார்.


என்னவோ போங்கப்பா.. ஒன்னுமே புரியலை.. நோபல் அமைதிப் பரிசு கிடைக்கும் வரை இப்படித்தான் இருப்பார் போல டிரம்ப்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்