வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பு தொடர்பாக ஒரு புது உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். பல நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் அதிக வரி போடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் அடங்கும்.
அமெரிக்க வணிகங்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இப்படி ஒரு முடிவை டிரம்ப் எடுத்துள்ளார். அதை விட முக்கியமாக, தனக்கு ஒத்து வராத நாடுகளுக்கும் கூடுதல் வரியைப் போட்டுத் தீட்டியுள்ளார் டிரம்ப். இந்த புது வரி, 69 நாடுகளின் பொருட்களுக்கு அடுத்த ஏழு நாட்களில் இருந்து அமலுக்கு வரும்.
புதிய வரி விதிப்பானது 10 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை உள்ளது. சிரியா நாட்டுப் பொருட்களுக்கு 41 சதவீதமும், கனடா பொருட்களுக்கு 35 சதவீதமும், பிரேசில் பொருட்களுக்கு 50 சதவீதமும், தைவான் பொருட்களுக்கு 20 சதவீதமும், சுவிட்சர்லாந்து பொருட்களுக்கு 39 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார் டிரம்ப். இந்தியா, ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்வதை நிறுத்தாத ஆத்திரத்தில் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு. அதேசமயம், தனக்குப் பொட்டிப் பாம்பாக அடங்கி நடக்கும் பாகிஸ்தான் நாட்டுப் பொருட்களுக்கான வரி 29 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது டிரம்ப்பின் கணிப்பு என்று சொல்கிறார்கள்.
இந்தியாவை சீண்டும் செயலாக இது பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவின் பொருளாதாரம் செத்துப் போய் விட்டது. ரஷ்யாவுடன் சேர்ந்து மேலும் அது மோசமாகும் என்றும் டிரம்ப் துவேஷமாக நம்மை விமர்சித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல, பாகிஸ்தானுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா தனது புத்தியை காட்டத் தொடங்கி விட்டதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகளுடன் அமெரிக்கா ஏற்கனவே செய்துள்ள வர்த்தக ஒப்பந்தங்களின்படி சில வரிகள் உள்ளன. இந்த புது உத்தரவில் பெயர் இல்லாத மற்ற எல்லா நாடுகளின் பொருட்களுக்கும் 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
யாருக்கு எவ்வளவு Tax?
இந்தியா - 25%
ஆப்கானிஸ்தான் - 15%
அல்ஜீரியா - 30%
அங்கோலா - 15%
வங்கதேசம் - 20%
பொலிவியா - 15%
போஸ்னியா ஹெர்சகோவினா - 30%
போட்ஸ்வானா - 15%
பிரேசில் - 10%
புரூனே - 25%
கம்போடியா - 19%
காமரூன் - 15%
சாட் - 15%
கோஸ்டாரிகா - 15%
ஐவரி கோஸ்ட் - 15%
காங்கோ - 15%
ஈக்வடார் - 15%
ஐரோப்பிய யூனியன் - 0%–15%
கினி - 15%
பாக்லாந்து தீவுகள் - s 10%
ஃபிஜி - 15%
கானா - 15%
கயானா - 15%
ஐஸ்லாந்து - 15%
இந்தோனேசியா - 19%
ஈராக் - 35%
இஸ்ரேல் 15%
ஜப்பான் 15%
ஜோர்டான் 15%
கஜகஸ்தான் 25%
லாவோஸ் 40%
லெசோதோ 15%
லிபியா 30%
லீக்டென்ஸ்டைன் 15%
மடகாஸ்கர் 15%
மலாவி 15%
மலேசியா 19%
மொரீஷியஸ் 15%
மால்டோவா 25%
மொசாம்பிக் 15%
மியான்மர் (பர்மா) 40%
நமீபியா 15%
நவ்ரு 15%
நியூசிலாந்து 15%
நிகரகுவா 18%
நைஜீரியா 15%
வடக்கு மாசிடோனியா 15%
நார்வே 15%
பாகிஸ்தான் 19%
பப்புவா நியூ கினியா 15%
பிலிப்பைன்ஸ் 19%
செர்பியா 35%
தென்னாப்பிரிக்கா 30%
தென் கொரியா 15%
இலங்கை 20%
சுவிட்சர்லாந்து 39%
சிரியா 41%
தைவான் 20%
தாய்லாந்து 19%
டிரினிடாட் மற்றும் டொபாகோ 15%
டுனிசியா 25%
துருக்கி 15%
உகாண்டா 15%
யுனைட்டெட் கிங்டம்- 10%
வானுவாட்டு 15%
வெனிசுலா 15%
வியட்நாம் 20%
சாம்பியா 15%
ஜிம்பாப்வே 15%
இங்கிலாந்து
71வது தேசிய திரைப்பட விருதுகள்.. ஷாருக் கான் சிறந்த நடிகர்.. எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர்!
10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!
சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!
எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால்.. ஓபிஎஸ்ஸை இழக்கும் பாஜக.. ஆட்டம் காணுகிறதா கூட்டணி?
6 மாவட்டங்களில் இன்றும்... 8 மாவட்டங்களில் நாளையும்... கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்!
கோச்சுக்காதீங்க.. சமாதான முயற்சியில் பாஜக...முடிவில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?
முதல்வரை சந்திக்க நான் நேரம் கேட்டேனா.. யார் சொன்னது?.. டாக்டர் ராமதாஸ் மறுப்பு
பாஜக.,வுடன் கூட்டணியா?.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்லை.. வைகோ பளிச் பதில்!
எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா?
{{comments.comment}}