Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?

Jul 08, 2025,05:51 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 14 நாடுகளுக்கு எதிராக புதிய வரிகளை விதித்துள்ளார். இந்த வரிகள் 25 முதல் 40 சதவீதம் வரை இருக்கும். 


இந்தியாவுடன் ஒரு சிறிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று டிரம்ப் திங்களன்று உறுதிப்படுத்தினார். பாகிஸ்தானுடன் ஒரு புரிந்துணர்வு எட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.


இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறுகையில், நாங்கள் இங்கிலாந்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப் போகிறோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் ஜப்பான், தென்கொரியா, பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ வரி விதிதங்களை அறிவித்துள்ளது அமெரிக்கா.




 "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" என்ற கொள்கையின் கீழ் வர்த்தகத்தை மீண்டும் சமநிலைப்படுத்த இது ஒரு புதிய முயற்சி என்று கூறப்படுகிறது.

டிரம்ப் விதித்துள்ள புதிய வரிகளால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கு 40 சதவீத வரியும், தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு 36 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் மற்றும் செர்பியாவுக்கு 35 சதவீத வரியும், இந்தோனேசியாவுக்கு 32 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. 


தென்னாப்பிரிக்கா மற்றும் போஸ்னியா & ஹெர்சகோவினாவுக்கு 30 சதவீத வரியும், மலேசியா, துனிசியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் கஜகஸ்தானுக்கு 25 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் பதிலுக்கு வரிகளை விதித்தால், அமெரிக்காவும் வரிகளை அதிகரிக்கும் என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. "எந்த காரணத்திற்காகவும் நீங்கள் உங்கள் வரிகளை உயர்த்தினால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த எண்ணாக இருந்தாலும்... அது நாங்கள் வசூலிக்கும் 25 சதவீதத்துடன் சேர்க்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.


இந்தியாவுக்கு கடந்த  ஏப்ரல் மாதம் 26 சதவீத வரி விதிக்கப்பட்ட பிறகு, இந்தியா அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர், இந்த வரி 90 நாட்களுக்கு 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. விவசாயம் மற்றும் பால் போன்ற முக்கியமான துறைகளை ஒப்பந்தத்தில் இருந்து விலக்க இந்தியா முயற்சி செய்து வருகிறது. ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் ஏற்றுமதிகளுக்கு அதிக வாய்ப்புகளை இந்தியா கேட்டுள்ளது. அதே நேரத்தில், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் விவசாய இறக்குமதியில் சீர்திருத்தங்களை அமெரிக்கா கோரியுள்ளது. 


மறுபக்கம் பாகிஸ்தானின் வர்த்தகக் குழு வாஷிங்டனில் நான்கு நாள் பேச்சுவார்த்தை நடத்தியது. பாகிஸ்தானிய ஜவுளி மற்றும் விவசாய ஏற்றுமதிகள் மீது 29 சதவீத வரிகளை மீண்டும் விதிப்பதை தடுக்கும் ஒரு "பரந்த புரிதலை" எட்டியுள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்கும். குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும். மேலும், பாகிஸ்தானின் சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் அமெரிக்க முதலீட்டை ஈர்க்கும். இந்த ஒப்பந்தம் US ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் ஆதரவை புதுப்பிக்க வழி வகுக்கும். இது பாகிஸ்தானின் பொருளாதார அழுத்தத்தை குறைக்கும். "ஜூலை 9-ம் தேதிக்கு முன் பாகிஸ்தான் அதிகாரிகள் தெளிவுபடுத்த விரும்பினர். புரிந்துணர்வு ஏற்பட்டதால், விரைவில் அதிகாரப்பூர்வ கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று இஸ்லாமாபாத்தை சேர்ந்த ஒரு மூத்த வர்த்தக அதிகாரி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

news

அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

news

வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!

news

21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!

news

பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!

news

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!

news

Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?

news

யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!

news

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்