நியூயார்க் : அமெரிக்கா முழுவதும் இன்ஃபுளுயன்சா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் தற்காப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. குளிர் காலத்தில் வழக்கமாக பரவும் இந்த வைரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவிற்கு வந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தற்போது உலகம் முழுவதும் இன்ஃபுளுயன்சா வைரஸ் வேகமாக பரவி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் குளிர் காலம் துவங்குவதற்கு முன்பாகவே இந்த வைரஸ் வேகமாக பரவ துவங்கி உள்ளது.

2019-2020 காலத்தை போலவே இந்த ஆண்டும் புத்தாண்டை ஒட்டி ஃபுளு அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.இவற்றில் அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் இன்ஃபுளுயன்சா மிக அதிகமாக பரவி வருதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு குளிர்கால ஃப்ளு சீசனின் போது உச்சம் தொட்ட நிலையில், இந்த ஆண்டும் அதிகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 251 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற நிலையில், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இன்ஃபுளுயன்சா சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். இன்ஃபுளுயன்சா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பது உண்மை தான். ஆனால் மீண்டும் கொரோனா போன்ற அளவிற்கு பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்ஃபுளுயன்சா பரவல் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கழிவுநீர் வழியாகவே அதிகமான வைரஸ்கள் பரவுவதால் மக்கள் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மிட்வெஸ்ட், இண்டியானா போன்ற பகுதிகளில் கோவிட் 19 பாதிப்பு அதிகமாக இருந்ததால் இன்ஃபுளுயன்சா பாதிப்பு அதிகம் வரலாம் என சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு!
சென்னையிலும், புறநகர்களிலும் ஜில் ஜில் மழை.. சிலுசிலுவென மாறிய கிளைமேட்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே!
தீமையை அழித்து.. ஆணவத்தை அழித்து.. நல்லெண்ணெங்களை விதைக்கும்.. சூரசம்ஹாரம்!
பைசன்.. என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லியுள்ளார் மாரி செல்வராஜ்.. ஒரு ஆசிரியையின் பாராட்டு!
பெண்ணல்ல தேவதை!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
{{comments.comment}}