லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ அருகே பஸ்ஸும், பால் வண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 19க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பீகார் மாநிலம் சீதாமார்ஹி என்ற இடத்திலிருந்து டெல்லி நோக்கி ஒரு டபுள் டெக்கர் பஸ் வந்து கொண்டிருந்தது. அதே திசையில் பால் வண்டி ஒன்று பஸ்ஸுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது. இன்று காலை உன்னாவோ அருகே இரு வாகனங்களும் போய்க் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி மீது பஸ் வேகமாக மோதியது.
இதில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் படு வேகமாக மோதியதால் தூக்கி எறியப்பட்டது. அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. உடைந்து கிடந்த கண்ணாடித் துகள்கள், தூக்கி வீசப்பட்ட பயணிகளின் பொருட்கள், சூட்கேஸ்கள், உடல்கள் என அந்த இடமே கோரமாக காணப்பட்டது.
அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து எப்படி நடந்தது என்று தெரியவில்லை. முன்னால் போய்க் கொண்டிருந்த லாரியை பஸ் ஓவர் டேக் செய்ய முயன்றபோது விபத்து நேரிட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
காயமடைந்த பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}