"எந்தப் பாம்பும் இவர்களிடமிருந்து தப்பாது".. பத்மஸ்ரீ விருது பெறும் வடிவேல் கோபால் - மாசி சடையன்!

Jan 26, 2023,09:22 AM IST
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச்  சேர்ந்த வடிவேல் கோபால் - மாசி சடையன் பெயர், இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட பிரபலமானது. இருவரும் பாம்பு பிடிப்பதில் அந்த அளவுக்கு நிபுணர்கள் ஆவர்.



வடிவேல் கோபாலுக்கு 47 வயதாகிறது. அவருடன் இணைந்து பாம்பு பிடிப்பவரான மாசி சடையனுக்கு 45 வயது. இருவரும் பல வகையான பாம்புகளைப் பிடிப்பதில் நிபுணர்கள். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மிகவும் அரிதாகி விட்ட பர்மிய பைதான் பாம்புகளைப் பிடித்து அந்த நாடுகளுக்கு அனுப்பி உதவியுள்ளனர். அதேபோல பாம்பு ஆய்வாளர் ரோமுலஸ் விட்டேகர் தலைமையில் அமெரிக்கா சென்று பாம்புகள் இனத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட குழுவில் வடிவேல் கோபாலும், மாசி சடையனும் முக்கியமான உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கூட அறியப்பட்ட நபர்களாக இருவரும் உள்ளனர். இவர்களிடமிருந்து எந்த வகையான விஷப் பாம்பும் தப்ப முடியாது. பாம்புகளிலேயே மிகவும் விஷத்தன்மை கொண்டது ராஜநாகம் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

தங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது குறித்து வடிவேல் கோபால் - மாசி சடையன் கூறுகையில், அரசுக்கு எங்களது நன்றி. ரோமுலலஸ் விட்டேகர் குழுவில் இடம் பெற்று நிறைய பாம்புகளைப் பிடித்துள்ளோம். அதன் மூலம்தான் நாங்கள் வெளியுலகுக்குத் தெரிய வந்தோம். அதற்காக அவருக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!

news

"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்