K9 வீரர்கள் யாருனு தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்

Mar 13, 2026,03:47 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


K9 வீரர்கள் தினம்


K9 வீரர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 அன்று கொண்டாடப்படுகிறது. காவல் துறை மற்றும் இராணுவத்தில் பணியாற்றும் நாய்களை கௌரவிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.


“K9” என்பது “Canine” என்ற சொல்லைக் குறிக்கிறது. இந்த நாய்கள் மிகவும் பயிற்சி பெற்றவை ஆகும். குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறைக்கு பெரிதும் உதவுகின்றன. போதைப் பொருட்களை கண்டறியவும்,ஏதேனும் கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயங்களை தேடுவதற்கும்  இந்த நாய்கள் முக்கியமாக  பயன்படுகின்றன.


வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கவும் K9 நாய்கள் உதவுகின்றன. காணாமல் போனவர்களை தேடும் பணியிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் இந்நாய்களின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.




இந்நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவை தங்கள் பயிற்சியாளர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறது. காவல் துறையில் இந்நாய்கள் வீரர்களாக கருதப்படுகின்றன. பல K9 நாய்கள் தங்கள் கடமையில் உயிரையும் தியாகம் செய்கின்றன. இந்த நாள் அவற்றின் சேவையை நினைவுகூர்ந்து கொண்டாடப்படுகிறது.


உலகின் பல நாடுகளில் K9 நாய்களில் பல பிரிவுகள்  உள்ளன. இந்நாய்கள் மனிதர்களின் பாதுகாப்புக்காக உழைக்கின்றன. அவற்றின் துணிச்சல் மற்றும் விசுவாசம் அனைவருக்கும் உதாரணமாக காணப்படுகிறது.


K9 வீரர்கள் தினம் அவர்களின் சேவையை கௌரவிக்கும் முக்கிய நாளாகும். குற்றவாளிகளைப் பின்தொடர்தல், காவல்காத்தல் மற்றும் இரவு நேர ரோந்து ஆகியவற்றில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. கடுமையான நிபந்தனைகள் மற்றும் நீண்ட கால பயிற்சிகளுக்குப் பிறகு, இவை களப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன, அவை "நிசப்த வீரர்கள்" (Silent Warriors) என்று அழைக்கப்படுகின்றன


உலகப் போர்களின் காலத்திலிருந்தே நாய்கள் ராணுவப் பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களாகிய நாம் இன்றைய  நாளில் K9 நாய்களின் பணியை பாராட்டி மகிழ்ந்திடுவோம்.  பாதுகாப்பு பணிகளில் இந்த நாய்கள் மிகவும் முக்கியமானவை என்பதை உணர்ந்து பெருமைப்படுவோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்