டெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மேட்ச்ல, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் டீமுக்கு எதிரா ராஜஸ்தான் ராயல்ஸ் டீமில் இடம் பிடித்த 14 வயசு பையனான வைபவ் சூர்யவன்ஷி காட்டிய அதிரடி பலரையும் வியக்க வைத்துள்ளது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றாலும் கூட, 20 பால்ல 34 ரன் எடுத்த சூர்யவன்ஷியின் அறிமுகம்தான் பலரையும் கவர்ந்துள்ளது. கிரிக்கெட் பாக்குற நிறைய பேரோட கவனத்தை ஈர்த்து விட்டார் வைபவ். வேகப் பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் போட்ட முதல் பால்லேயே சிக்ஸர் அடிச்சு நான் வந்துட்டன்னு சொல்லு என்று அனைவருக்கும் சரியான மெசேஜ் கொடுத்துள்ளார் வைபவ்.
போன வருஷம் நடந்த ஐபிஎல் ஏலத்துல ராஜஸ்தான் ராயல்ஸ் டீம் ₹1.1 கோடி கொடுத்து வாங்குன சூர்யவன்ஷி, ஐபிஎல் வாழ்க்கைக்கு நல்லா ரெடியாகுறதுக்காக மிகவும் மெனக்கெட்டு தயாராகியுள்ளார். நிறைய உழைத்துள்ளார். குறிப்பாக ஸ்டிரிக்ட்டான டயட்டையும் அவர் பாலோ செய்துள்ளார்.
அவருக்கு ஆட்டுக்கறி சாப்பிடக்கூடாதுன்னு ஆர்டர் போட்டிருக்காங்க. அவரோட சாப்பாட்டு லிஸ்ட்ல இருந்து பீட்சாவ எடுத்துட்டாங்க. வைபவுக்கு கோழிக்கறியும் ஆட்டுக்கறியும்தான் ரொம்ப பிடிக்கும். சின்ன பையன்ல, அதனால பீட்சான்னா அவருக்கு ரொம்ப இஷ்டம். ஆனா இப்ப அத சாப்பிடுறது இல்ல. நாங்க அவருக்கு ஆட்டுக்கறி கொடுக்கும்போது, எவ்ளோ கொடுத்தாலும் எல்லாத்தையும் சாப்பிட்டுடுவார். அதனாலதான் கொஞ்சம் குண்டா தெரியுறார்னு வைபவோட கோச் மனிஷ் ஓஜா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார்.
இடது கை பேட்ஸ்மேன் ஆன வைபவ், யுவராஜ் சிங்கும் பிரையன் லாராவும் கலந்த மாதிரி இருக்கார்னு கூறுகிறார் ஓஜா. அதுமட்டுமில்லாம, அவரோட அதிரடி ஆட்டமும் யுவராஜ் சிங் மாதிரியே இருக்குன்னும் பலரும் சொல்கிறார்கள். அதாவது பயமே இல்லாமல் பந்தை பந்தாடுவதுதான் யுவராஜ் சிங்கின் வேலை. அதையேதான் இப்போது வைபவும் செய்கிறார் என்பது பலரது கருத்தாகும்.
வைபவுக்கு மிகப் பெரிய கிரிக்கெட் இன்னிங்ஸ் காத்திருக்கிறது. மிகப் பெரிய அளவில் அவர் ஜொலிப்பார். இந்த ஐபிஎல் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி அவர் அசத்தப் போகிறார். பயமில்லாத பேட்ஸ்மேன். பிரையன் லாராவ ரொம்ப பிடிக்கும்னு நிறைய தடவை சொல்லிருக்கார். ஆனா அவன் யுவராஜ் சிங்கும் பிரையன் லாராவும் சேர்ந்த கலவைதான் வைபவ். அவரோட அதிரடி யுவராஜ் மாதிரியே இருக்கு என்றும் ஓஜா பெருமிதத்துடன் சொல்கிறார்.
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
{{comments.comment}}