- ஸ்வர்ணலட்சுமி
விசுவா வசு வருடம் 2025 ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வைகாசி 26 ஆம் நாள் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் அவதரித்த திருநாளே வைகாசி விசாகம். வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் முழு நிலவு பௌர்ணமியுடன் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமானது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா ,இலங்கை, மாலத்தீவு -தமிழர்கள் கணிசமான அளவில் வாழும் இடங்களில் வைகாசி விசாகம் மிகுந்த மகிமையுடனும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகம் பற்றிய புராணக்கதை:
சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து கடுமையான தீப்பொறிகளின் வடிவத்தில் பிறந்தார் முருகப்பெருமான். தீ பொறிகளின் தீயின் உக்கிரம் தேவர்களால் தாங்க முடியாததால் தீப்பொறிகள் ஆற்றில் மூழ்கி குளிர்விக்கப்பட்டன. அந்த வலிமை மிகுந்த நதி சரவணப் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. தீப்பொறிகள் ஆறு தீப்பொறிகளாக சிதறி ஆறு குழந்தைகளாக தாமரை மலர் மீது அவதரித்தன .கார்த்திகை பெண்கள் குழந்தைகளை வளர்த்தனர் .பின்னர் பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் அணைத்து ஒரே ஆண் குழந்தையாக ஒன்றிணைத்தார். அவரே முருகப் பெருமான். 12 கைகளையும் ஆறு முகங்களையும் ஆறுமுகப்பெருமான் ஞானவிருட்சமாகிய சிவபெருமானின் நெற்றி கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியிலிருந்து உதித்தவர் ஆவார்.
விசாகம் என்பதற்கு துளித்து வருதல் என்ற பொருள் உண்டு .ஆறு குழந்தைகளை தாய் ஒன்றுபடுத்திய திருநாள் வைகாசி விசாகம் என்பதால் கந்தன் என்றும் கூறுவர்.
முருகன் மிகவும் அழகானவர் .வசீகரமான முகமும் ,தெய்வீக ஆளுமை உடையவர். ஞானமும் மிகுந்த அறிவாற்றல் மிக்கவர் .அவர் சிவபெருமானுக்கு "பிரணவ மந்திரம்" என்ற அர்த்தத்தை கற்றுக் கொடுத்தவர் என்று ஸ்கந்த புராணம் விவரிக்கிறது.
ஆறுமுக கடவுளான முருகனுடைய ஆறுமுகங்களின் பண்புகள்:
முருகப்பெருமானின் ஆறுமுகங்கள் ஆறு வெவ்வேறு பண்புகளை குறிக்கின்றன.
1. முதல்முகம் உலகைச் சூழ்ந்துள்ள இருளை நீக்கி மகிமையான ஒளிக் கதிர்களை வெளியிடுகிறது.
2 .இரண்டாவது முகம் தனது பக்தர்களுக்கு அருள் ஆசிகளை கருணையுடன் அருள்கிறது .
3 . மூன்றாவது முகம் தர்மத்தை பாதுகாத்து பாரம்பரியத்தை பேணுகிறது.
4. நான்காவது முகம் உலகை ஆளும் மாய அறிவும், ஞானமும் அருள்கிறது.
5. ஐந்தாவது முகம் எதிர்மறைகளில் இருந்து மக்களை பாதுகாக்கிறது.
6.ஆறாவது முகம் அனைத்து பக்தர்களிடமும் அன்பும் கருணையும் அருள்கிறது.
வைகாசி விசாகம் விரத முறை மற்றும் நேரம்:
வைகாசி விசாக விரதம் 96 அல்லது ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு. நேரம்: ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் ஜூன் 9 திங்கட்கிழமை மாலை 4 மணி வரை வைகாசி விசாகம் உள்ளது .சூரிய உதயத்தில் இருந்து தான் விரதம் துவங்க வேண்டும்.
வைகாசி விசாகத்தன்று முருகன் கோவில்களில் முருகன் பாலபிஷேகம் பார்ப்பது மற்றும் அபிஷேகப் பொருட்கள் வாங்கி செல்வது மிகவும் சிறப்பானதாகும். வீடுகளில் பூஜை அறையில் ஷட் கோண கோலம் இட்டு முருகனை மலர்களால் அலங்கரித்து வெற்றிலை தீபம் ஏற்றி நைவேத்தியம் வைத்து பூஜை செய்து மனதார முருகனை வழிபட நினைத்த காரியம் வெற்றி பெறும் .குழந்தை வரம் வேண்டும் என்று வேண்டுபவர்களுக்கு முருகன் அருள் கட்டாயம் கிட்டும். தடைகள் விலகி திருமணம் கைகூடும். தொழில் வியாபாரம் சிறக்கும். சொந்த வீடு அமையும் .அனைத்து வளங்களும் நலங்களும் முருகப்பெருமான் அருள்வார்.
"ஓம் சரவணபவ "என்னும் மந்திரம் உச்சரிப்பது, கந்தர் அலங்காரம், கந்த குரு கவசம் ,கந்த சஷ்டி கவசம் ,வேல்மாறல், குமாரஸ்தவம், கந்தர் அனுபூதி ,திருப்புகழ் படிக்க கந்தன் அருள் கட்டாயம் கிடைக்கும். இப்பாடல்களை ஒலிக்க செய்து கேட்பதும் புண்ணியமே. தலையெழுத்தை மாற்றும் சக்தி வைகாசி விசாகத்திற்கு உண்டு. "யாமிருக்க பயமேன்" என்பது முருகன் நமக்கு தரும் நம்பிக்கை . வைகாசி விசாகத்தன்று அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.
மேலும் ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}