"பச்சை கவர் பாலுக்குப் பதில் .. டிலைட் பாலா.. இதெல்லாம் ஏற்கவே முடியாது".. வானதி சீனிவாசன்!

Nov 20, 2023,08:11 PM IST

சென்னை:  ஆவின் பச்சை  உறை பாலை நிறுத்தி விட்டு, அதற்குப் பதில் டிலைட் என்ற பெயரில் புதிய பாலை அறிமுகம் செய்வது ஏற்புடையதல்ல என்று பாஜக மகளிர் அணி தேசியத் தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


ஆவின் நிறுவனம் பல்வேறு உறைகளில் பலவிதமான பாலை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆவின் பச்சை கவர் பால் விற்பனையை நிறுத்தி விட்டு அதற்குப் பதில், ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக  செய்திகள் வருகின்றன.


இதற்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வானதி சீனிவாசனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




தமிழ்நாட்டில் பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ஆம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.  ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.


தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை மாற்றி அதற்கு மாற்றாக 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் திணிப்பது தான் மக்கள் மீது அரசுக்கு எவ்வளவு அக்கறை என்பதை தெளிவாக காட்டுகிறது 


ஆவின் நீலம், பச்சை, ஆரஞ்சு வண்ண உறைகளில் விற்கப்படும் பால்களுடன் கூடுதலாக அறிமுகம் செய்திருக்க வேண்டும். அதற்கு பதில் டிலைட் பாலை அறிமுகம் செய்திருக்கக் கூடாது.ஊட்டச்சத்தும் குறைத்து விலையும் ஏற்றி விற்கப்படுவது ஏற்புடையதல்ல 


இந்த மறைமுகமான விலை உயர்வை மக்கள் மீது திணிக்கும் தமிழக அரசின் முடிவை உடனடியாக நிறுத்த  வேண்டும்.  இந்த மறைமுகமான விலை உயர்வை மக்கள் மீது திணிக்கும் தமிழக அரசின் முடிவை உடனடியாக திரும்பபெறவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்