சென்னை: ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் திமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும், நெருக்கடியும் எங்களுக்கு இல்லை.அதே போல் விசிகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையில் எந்த மோதலும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பிகள் மற்றும் எம்எல்ஏக்கள் சார்பில் புயல் நிவராண தொகை ரூ.10 லட்சத்தை விசிக தலைவர் திருமாவளவன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தரப்பில் இருந்து எனக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. அதை பற்றி என்னிடம் எதுவும் பேசவில்லை. விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் பங்கேறகவில்லை என்று எடுத்த முடிவு சுதந்திரமான முடிவு. விடுதலை சிறுத்தை கட்சிக்கும், தமிழக வெற்றிக்கழக கட்சிக்கும் எந்த மோதலும் இல்லை.
விஜய் அவர்களோடு எங்களுக்கு சர்ச்சையோ, சிக்கலோ ஏற்பட்டது இல்லை. ஆனால், அவரோடு ஒரே மேடையில் பங்கேற்கும் போது எங்களுடைய கொள்கைப்பகைவர்கள், எங்கள் வளர்ச்சியை விரும்பாதவர்கள், எங்களை வீழ்த்த வேண்டும் என்று கருதக்கூடியவர் அதை ஒரு வாய்ப்பாக கருதி கதைகட்டுபவர்களுக்கும், திரித்து பேசுபவர்களுக்கும் அது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதி, முன் உணர்ந்து எங்கள் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் எடுத்த முடிவு இது.அவ்வளவு தான். அதை விகடன் பதிப்பகத்தாருக்கு முதலிலேயே சுட்டி காண்பித்து விட்டோம்.
இதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவரோடு நிற்பதை நாங்கள் வேறு எந்த கோணத்திலும் தவறாக அணுக வில்லை. அவரை வைத்து புத்தகத்தை வெளியிடலாம் என்றும் அறிவித்து விட்டோம். ஆனால், அதை தொடர்ந்து சர்ச்சையாக பேசு பொருளாக சிலர் திட்டமிட்டு மாற்றினார்கள். அதையடுத்து, நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பங்கேற்பதற்கு முன்பு என்னிடத்தில் பேசினார். அந்த நூலை உருவாக்கியதில் உங்களுக்கு பங்கு இருக்கிறது. ஆகவே அந்த விழாவை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். அப்படியே உங்களை கட்டுப்படுத்தினால் அது ஜனநாயகம் இல்லை.
ஆகவே, நீங்கள் சுதந்திரமாக நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கலாம். இதில், எனக்கு எந்த நெருடலும் இல்லை என்பதை அவருக்கு நான் சொன்னேன். ஆனால், அதே வேலையில் அரசியல் எதுவும் பேச வேண்டாம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி பேசுங்கள் அல்லது அந்த நூல் உருவாக்கத்தில் இருந்த பின்னணி பற்றி பேசுங்கள் என்று வழிகாட்டு தலை தந்தேன். அதையும் மீறி அவர் பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசிகவின் நம்பகத் தன்மையை நொறுக்கும் அளவுக்கு அது அமைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
{{comments.comment}}