நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

Nov 02, 2023,08:37 AM IST

சென்னை: பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா எனப்படும் ரகு பாலையா காலமானார்.


மூத்த முதுபெரும் நடிகர் டி.எஸ். பாலையாவின் 3வது மகன்தான் ஜூனியர் பாலையா எனப்படும் ரகு பாலையா. தனது தந்தை வழியிலும் தானும் நடிகராக வலம் வந்தவர். காமெடியா கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்திருப்பார். சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.


மேல்நாட்டு மருமகள் படம்தான் இவரது முதல் படமாகும். அதிலிருந்து தொடங்கிய இவரது திரை வாழ்க்கையில், கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே  உள்ளிட்ட பல படங்கள் முக்கியமானதாக அமைந்தது. சில முக்கியமான டிவி தொடர்களிலும் கூட இவர் நடித்துள்ளார். சிறு சிறு வேடங்களில் வந்தாலும் கூட தனது பாணி நடிப்பால் முத்திரை பதித்தவர் ஜூனியர் பாலையா. 




குறிப்பாக பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான விட்ல விசேஷங்க, சுந்தரகாண்டம் படங்களில் இவரது கேரக்டர் வெகுவாக பேசப்பட்டது.  கடைசியாக ஜூனியர் பாலையா நடித்த படம் என்னங்க சார் உங்க சட்டம் தான். அதன் பிறகு நடிக்கவில்லை. தனது கெரியர் முழுவதும் துணைக் கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளார் ஜூனியர் பாலையா. தனது தந்தையைப் போலவே பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கூட அது நடக்காமல் போய் விட்டது.  ஜூனியர் பாலையா போலவே அவரது மகன் ரோஹித் பாலையாவும் நடிகராக உருவாகியுள்ளார்.


பாலையாவின் உடல் சென்னை ஆழ்வார்திருநகர், ராமகிருஷ்ணா நகர், வாஞ்சிநாதன் தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்குப் பிறகு  இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்

news

சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்

news

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!

news

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்