புதுச்சேரி: புதுச்சேரி வந்திருந்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், தன்னை வரவேற்ற முதல்வர் ரங்கசாமி காதில் கிசுகிசுப்பாக ஏதோ சொல்ல முதல்வர் ரங்கசாமி முகம் முழுவதும் தெளசன்ட் வாலா பட்டாசு போல சிரிப்பால் மலர்ந்தது. அப்படி என்னதான் சொல்லியிருப்பார் ஜெகதீப் தங்கர் என்று புதுச்சேரி அரசியல் வட்டாரமே கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் புதுச்சேரிக்கு வந்திருந்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வளர்ந்த பாரதம் 2047 என்ற தலைப்பில் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தங்கர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.

முன்னதாக புதுச்சேரிக்கு வந்த தங்கரை, துணை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து இந்திய துணை குடியரசுத் தலைவர் வளர்ந்த பாரதம் 2047 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் முன்பு உரையாற்றினார்.
இதன் பின்னர் இவருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். அப்போதுதான் ரங்கசாமி காதில் கிசுகிசுத்தார் ஜெகதீப் தங்கர். இன்று காலை
7 :15 மணிக்கு அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார் குடியரசு துணைத் தலைவர்.
இதனை தொடர்ந்து காலை 8:30 மணி அளவில் புதுச்சேரி பயணத்தை முடித்துக் கொண்டு அவர் புறப்பட்டுச் சென்றார். அவரை துணை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்திய துணை குடியரசுத் தலைவரை வழியனுப்பி வைத்தனர்.
பரிக்ஷா பே சர்ச்சா 2024 நிகழ்ச்சி:

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி உடன் மாணவர்கள் கலந்துரையாடும் பரிக்ஷா பே சச்சா 2024 நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி புதுச்சேரி அரசு கம்பன் கவியரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி,சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பள்ளி மாணவர்கள் பிரதமருடன் கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா- 2024 நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் சேதாரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மேல்நிலை கல்வி பயிலும் மாணவி தீபஸ்ரீ காணொளி வாயிலாக பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார்.
சுடச் சுட.. சுவையான நெய் சாதம் ரெடி.. குழந்தைகளே வாருங்கள் ருசிக்கலாம்!
தொழுதேத்தும் பத்மநாபன்.. யாதவ குல திலகன்.. மதுசூதனன் மாயன்!
தமிழன் என்றாலே வீரம்.. அந்த வீரத் திமிருக்கு சொந்தக்காரன்.. முறுக்கு மீசைக்காரன் பாரதியார்!
பச்சை பயிறு ஈரல் கிரேவி.. சத்தியமா நம்புங்க.. இது சைவ மெனுதான்.. என்னங்க சொல்றீங்க!
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
{{comments.comment}}