கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ சிறப்பாக கையாளவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளை கலைத்ததே மமதா பானர்ஜிதான் என்று மாணவியின் தந்தை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அது மட்டும் இன்றி பயிற்சி பெண் மருத்துவரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு நாடு தழுவிய போராட்டமும் நடைபெற்றது.
இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் தங்களின் மருத்துவ சேவைகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய்க்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நிரூபித்தது.
இதனால், சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் சியால்டா சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனையடுத்து குற்றவாளி சஞ்சய் ராயை சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்தும், குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது நீதிமன்றம். இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என மரண தண்டனை விதிக்கப்படாததற்கு என்று நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், வழக்கை சிபிஐ சிறப்பாக கையாளவில்லை என கொல்கத்தா முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றசாட்டியிருந்தார். நாங்கள் விசாரித்திருந்தால் மரண தண்டனை வாங்கிக் கொடுத்திருப்போம் என்றும் கூறிய மமதா பானர்ஜி, தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தை, முதல்வர் மமதா மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், முதல்வர் மமதா பானர்ஜியும், அவரது அரசும்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளை, ஆதராங்களை அழித்தது. எங்களுக்கு தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுப்போம். இதுவரை முதல்வர் மமதா பானர்ஜி செய்தது போதும். இனியும் அவசர கோலத்தில் அவர் எதையும் செய்யாமல் இருப்பதே நல்லது. சிபிஐயால் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை. காரணம் அவற்றை மமதா பானர்ஜி அரசு அழித்து விட்டது. அப்போது இருந்த போலீஸ் கமிஷனரும் மற்றவர்களும்தான் இதற்குக் காரணம். இதனால்தான் சிபிஐயால் வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் போய் விட்டது என்று அவர் குமுறலுடன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம
நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி
மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?
வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!
பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு
ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்
{{comments.comment}}