விக்னேஷ் சிவனின் "எல்ஐசி"க்கு வந்தது சிக்கல்.. "அது என் தலைப்பு".. பஞ்சாயத்தைக் கூட்டிய குமரன்!

Dec 15, 2023,06:22 PM IST
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  ல்வ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கு புதிய படமான எல்ஐசி படத்தின் டைட்டில் தன்னுடையது என்று கூறி ஒரு இயக்குநர், புகார் கொடுத்துள்ளார். இதனால் இந்த டைட்டிலைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோமாளி படத்தின் இயக்குநர்தான் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர். முதல் படம் சூப்பர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து  இயக்குநராக புகழ் பெறுவார் என்று பார்த்தால், தனது 2வது படத்தில் அவரே ஹீரோவாகி விட்டார். லவ் டுடே படத்தில் அவரது நடிப்பும், அந்தப் படத்தின் கதையும் வெகுவாக பாராட்டப்பட்டது.



தனது இயல்பான நடிப்பில் புகழ் பெற்றவர் தான் பிரதீப் ரங்கநாதன். இன்றைய கால கட்டத்தில் செல்போன் மூலம் எவ்வளவு பிரச்சனைகள் நடக்கின்றன என்பதனை நகைச்சுவையும் காதலும் கலந்து இப்படத்தின் மூலம் இளம் தலைமுறையினரிடையே தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர்  தான் பிரதீப். 

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். லியோ பட தயாரிப்பாளர் மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் படம் தான் எல்ஐசி. இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் பிரதீப். இன்றைய இளைஞர்களின் பிரியமான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். ஹீரோயினாக நடிப்பவர் கிரித்தி ஷெட்டி. 



பல முக்கிய பிரபலங்கள் இணைவதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது. எல்ஐசி சூப்பர் டூப்பர் ஹிட் படமாக வெளிவரும் என்று ரசிகர்களின் எதிர்பார்த்து காத்துள்ளனர். லியோ படத் தயாரிப்பாளரான  செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் இதை தயாரிக்கிறார். எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

இந்த நிலையில் படத்தின் டைட்டிலுக்குப் பிரச்சினை வந்துள்ளது. எஸ்.எஸ். குமரன் என்ற இசையமைப்பாளர் + இயக்குநர், இது தான் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள டைட்டில் என்று கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் எல்ஐசி என்ற பெயரைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



சரி அது என்ன எல்ஐசி?

Love Insurance Corporation .. இதாங்க அதோட அப்ரிவியேஷன்.. சூப்பர்பா!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்