தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

Dec 18, 2025,12:49 PM IST

ஈரோடு : திமுக.,விற்கு அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் தான் துணை. ஆனால் தனக்கு மக்கள் வச்சிருக்கும் மாஸ் தான் துணை என ஈரோட்டில் திமுக.,வை மிக கடுமையாக பேசி தாக்கி உள்ளார் தவெக தலைவர் விஜய்.


மஞ்சள் எடுத்து வச்சு தான் நல்ல காரியம் செய்வார்கள். நம்முடைய வீடுகளில் பெண்கள் கூட நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக  மஞ்சள் புடவையை கட்டிக் கொண்டு தான் கோவிலுக்கு செல்வார்கள். அப்படிப்பட்ட மங்களகரமான பூமி தான் ஈரோடு. மஞ்சள் விளையும் மகத்தான பூமி ஈரோடு. ஈரோடு மண், விவசாயத்திற்கும் பேர் போன மண். காலிங்கராயன் அணை கட்டுவதிலும், கால்வாய் வெட்டும் போதும் . அம்மா கொடுக்கும் தைரியத்தை தாண்டி வேறு எதுவும் கிடையாது. எதையும் சாதிக்க முடியும். அப்படி ஒரு தைரியத்தை தான் நீங்கள் எனக்கு கொடுத்திருக்கீங்க. துணையாக நிற்கிறீர்கள். இதை எப்படி கெடுக்கலாம், பிரிக்கலாம், விஜய் மீது அவதூற பரப்பலாம் என சில சூழ்ச்சி கூட்டங்கள் தொடர்ந்து . இது 33 ஆண்டுகளாக இருக்கும் பாச உறவு. நீங்க என்ன டிரை பண்ணினாலும், எல்லாத்தையும் விட்டுட்டு அரசியலுக்கு வந்திருக்க இந்த விஜய்யை மக்கள் ஒரு நாளும் கை விட மாட்டீங்கன்னு நம்புறேன். வாழ்நாள் பூரா உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். 




பெரியார் பெயரை சொல்லி கொள்ளை அடிக்காதீங்க. இப்படி கொள்ளை அடிப்பவர்கள் தான் நம்முடைய அரசியல் எதிரி. இது உங்களுக்கு புரியது என்பது எனக்கு போதும். களத்தில் இல்லாதவர்கள், களத்திற்கு சம்பந்தவர்களை எதிர்க்கும் ஐடியா கிடையாது. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. நீட், கல்விக் கடன் ரத்து, கேஸ் மானியம் இதெல்லாம் சொன்னாங்களே. செய்தார்களா? ஈரோடு மக்களுக்காக திமுக எதுவும் செய்யவில்லை. ஈரோடு மஞ்சள், கரும்பு, நெல் என அனைத்திலும் ஊழல். நீங்கள் கொள்ளை அடித்து சேர்த்து வைத்திருக்கும் பணம் தான் உங்களுக்கு துணை. ஆனால் எனக்கு மக்களின் இந்த மாஸ் தான் துணை.


விஜய்யை, தவெக.,வை எப்படி முடக்கலாம் என்பது தான்  அவர்களின் 24 மணி நேர சிந்தனையாக உள்ளது. பவானி-நொய்யலாறு-அமராவதி இணைப்பிற்காக எதுவும் செய்யவில்லை. ஆற்று மணலை கொள்ளையடிப்பதில் மட்டும் வேலையை செய்வார்கள். கொஞ்சம் அசந்தால் மற்ற மாவட்டங்களை போல் மலைகள், ஆறுகள் காணாமல் போனதை போல் ஈரோட்டிலும் செம்மண் காணாமல் போகும்.  பிரச்சனைகளை தீர்க்க தீர்வு சொல்லாமல் மாடல் அரசு என சொல்ல கூச்சமாக இல்லையா?


நான் எத்தனை நிமிடம் பேசினால், எப்படி பேசினால் உங்களுக்கு என்ன சார்? உங்களை போல் தனிப்பட்ட தரக்குறைவாக, அசிங்கமாக பேசுவது அரசியல் என்றால் அத எனக்கு வராது. வரும், ஆனால் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? தஞ்சையில் நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டு விமர்சித்தார்கள். சலுகைகளுக்கு எதிரானவன் நான் கிடையாது. மக்கள் பணத்தில் அவர்களுக்காக செய்வதை ஓசி என கேவலப்படுத்துவதை தான் எதிர்க்கிறேன். என் மக்கள் மானத்துடன், கெளரவமாக வாழணும். 


நாங்கள் வாயில் வடை சுட திமுக இல்லை, தவெக. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நானும் சொல்கிறேன் திமுக ஒரு தீயசக்தி. தூயசக்தி, தவெக. என்னை முடக்கலாம் என நினைக்கிறீர்கள். ஆனால் இந்த சத்தத்தை உங்களால் முடக்க முடியாது. செங்கோட்டையன் வந்து சேர்ந்தது மிகப் பெரிய பலம். அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். தீயசக்தி திமுக.,விற்கும், தவெக.,விற்கும் தான் போட்டி. இவ்வாறு விஜய் பேசினார். இந்நிகழ்ச்சியில் விஜய்க்கு வெள்ளி செங்கோலை பரிசாக வழங்கினார், செங்கோட்டையன்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

news

விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்

news

அழகான ஷிப்பே.. பிரண்ட்ஷிப்தானே.. Friendship and Friendship!

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான்: செங்கோட்டையன்

news

எதிர்மறை எண்ணங்கள்.. எப்போதும் பிரகாசமான எதிர்காலத்தைத் தராது!

அதிகம் பார்க்கும் செய்திகள்