Leo Success Meet: நமக்கு பெரிய வேலை இருக்கு நண்பா.. ரசிகர்களுக்கு விஜய் மாஸ் அழைப்பு!

Nov 01, 2023,10:45 PM IST
சென்னை: ரசிகர்களாகிய நீங்கள் கொஞ்ச நாளா ரொம்ப கோபமா இருக்கீங்க. அதையெல்லாம் விடுங்க நண்பா. நமக்கு பெரிய வேலை இருக்கு என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். தான் அரசியலுக்கு வரப் போவதை அவர் சூசகமாக சுட்டிக் காட்டியுள்ளார் விஜய் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

லியோ வெற்றி விழா சென்னையில் இன்று கோலாகலமாக ட்தது. அதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசினார். அவரது பேச்சிலிருந்து:



இவ்வளவு நாள் நான்தான் என் நெஞ்சுக்குள்ள உங்களை வச்சிருக்கேன்னு நினைச்சேன். இப்பத்தான் புரியுது நீங்க உங்களோட இதயத்துல எனக்கு பெரிய இடம் கொடுத்திருக்கீங்கன்னு. என் தோலை செருப்பா தச்சா கூட உங்க அன்புக்கு ஈடாகாது. இதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. ஒன்னு செய்யலாம்..  நா உங்களுக்கு உண்மையா இருப்பேன். 

கொஞ்ச நாளா பார்க்கிறேன்..சோஷியல் மீடியால கோபமா இருக்கீங்க. ஏன் சோஷியல் மீடியால கோபம் ஜாஸ்தியா இருக்கு. நமக்கு அது வேலை இல்லை. நமக்கு பெரிய வேலை இருக்கு. நம்மாள எதை ஈஸியா ஜெயிக்க  முடியுமோ அது வெற்றி இல்லை.  எது முடியாதோ அதை பண்ணனும்.. அதுதான் வெற்றி. முயற்சித்து பண்ணனும். பெரிதினும் பெரிது கேள். ஆசை படணும்.. அதுல என்ன தப்பு. சின்னதா எய்ம் பண்ணாதான் தப்பு. பெருசா எய்ம் பண்ணுங்க.

ஒரு குட்டிக் கதை..  ஒரு நாள் 2 பேரு காட்டுக்கு வேட்டைக்குப் போனாங்களாம். அந்த காட்டுல சிங்கம், புலி, காக்கா, கழுகு நிறைய இருந்துச்சாம்.. காடுன்னா இதெல்லாம் இருக்கும்ல. ஒரு வேட்டைக்காரன் முயலுக்கு குறி வச்சான். இன்னொருத்தன் யானைக்கு குறி வச்சான். முயலுக்கு குறி வச்சவனுக்கு அது கிடைச்சுச்சு. இன்னொருத்தன் வெறுங்கையோட வந்தான். எனக்கு 2வது வேட்டைக்காரனைத்தான் பிடிச்சிருக்கு.. ஏன்னா அவன் பெருசா எய்ம் பண்ணான். பெருசா எய்ம் பண்ணனும்.

ஒரு தடவை ஏவிஎம் சரவணன் சார், டிராபிக் சிக்னல்ல ஒரு பாட்டிக்கு 100 ரூபாய் கொடுத்திருக்கார். அதை வாங்கிய பாட்டி, நல்லா இருப்பா எம்ஜிஆர்னு வாழ்த்திருக்காங்க. அந்தக் காலத்துல, யாராவது ஏழைகளுக்கு உதவி செஞ்சா அவரை எம்ஜிஆர்னுதான் நினைப்பாங்க. எதிர்காலத்தில் இதேபோல உதவி செய்றவங்களா நம்ம பசங்க இருப்பாங்க.

புரட்சித் தலைவர்னா ஒருத்தர்தான்.. நடிகர் திலகம்னா ஒருத்தர்தான்.. சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான்.. உலகநாயகன்னா ஒருத்தர்தான்.. புரட்சிக் கலைஞர்னா ஒருத்தர்தான்.. தலன்னா ஒருத்தர்தான்.. மக்கள்தான் மன்னர்கள்.. நா தளபதி.. தளபதின்னா என்னன்னு தெரியும்.. நீங்க ஆணையிடுங்க. நான் செஞ்சுட்டு போறேன் என்றார் விஜய்.

விஜய்யின் பேச்சு ரசிகர்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாரையும் தாழ்த்தாமல் யாரையும் விமர்சிக்காமல், மிக மிக நாகரீகமாக அட்டகாசமாக விஜய் பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்