சென்னை: வருகிற செப்., 27ம் தேதி சனிக்கிழமை நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் மாற்றம் செய்து நாமக்கல் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதிய வரவாக தவெக கட்சி இடம் பெறுகிறது. இந்த கட்சியின் தலைவர் விஜய் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் 2 பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி மக்களை சந்தித்தார். அதனையடுத்து
தவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த 13ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திருச்சி மற்றும் அரியலூர் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 20ம் தேதி சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வந்தார். புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி ஸ்டேடியம், நாகூர் புதிய பஸ் ஸ்டாண்ட், வேளாங்கண்ணி ஆர்ச் ஆகிய இடங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள நாகை போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு போலீசார் மேற் குறிப்பிட்ட இடங்களில் புத்தூர் ரவுண்டானாவிற்கு பதிலாக அண்ணா சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினர். இந்த இடம் மாற்றத்திற்கு தவெக தலைவர் விஜய் கேட்ட இடங்களுக்கு அனுமதி தராமல் குறுகலான இடங்களில் பிரச்சாரம் செய்த அனுமதி அளித்து மக்களை சந்திப்பதை திமுக அரசு தடுத்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து, வருகிற சனிக்கிழமை செப்., 27ம் நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த நிலையில், நாமக்கல்லில் விஜய் பிச்சாரம் செய்யும் இடம் மாற்றம். பதிநகர் பேருந்து நிலையத்திற்கு பதில், கே.எஸ் தியேட்டர் அருகில் பிரச்சாரம் செய்ய உள்ளார் விஜய் என்று நாமக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
{{comments.comment}}