லியோ வெற்றி விழா.. போலீஸ் பச்சைக் கொடி காட்டியது.. என்ன நண்பா நண்பிகளே ரெடியா?

Oct 30, 2023,12:25 PM IST


- மஞ்சுளா தேவி


சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ பட வெற்றி விழாவை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஏற்கனவே சென்னை நேரு உள் அரங்கில் நடைபெற இருந்த லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு கடைசி நேரத்தில்   ரத்து செய்யப்பட்டது. இதில் அரசியல் காரணம் இருக்குமோ என பல கேள்விகள் எழுந்தன.  அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளும் வெடித்தன.


இருப்பினும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் பல தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இருப்பினும், லியோ படம் முதல் வாரத்திலேயே  கிட்டத்தட்ட ரூ. 461 கோடி வசூலில் சாதனை படைத்தது. 




இந்த நிலையில், தற்போது படத்தின் வெற்றி விழாவை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தயாரிப்பாளர் லலித் குமார் தரப்பில் காவல்துறையினரிடம் கோரிக்கை விவிடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று காவல் துறையினர் படக்குழுவினருக்கு பதில் கடிதம் அனுப்பி இருந்தனர். அதில் வெற்றி விழா  எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும்.. யார் யார்? கலந்து கொள்கிறார்கள்.. பாதுகாப்பிற்கு தனியார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா.. எத்தனை டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் 5000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.


இந்நிலையில் லியோ பட வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நேரு விளையாட்டு உள் அரங்கில் வேறு எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. விழா நடத்த முறையாக என். ஒ. சி கடிதம் பெற்று, தொகை செலுத்தினால் லியோ பட வெற்றி விழாவுக்கு அனுமதி வழங்கப்படும். நேரு விளையாட்டு உள் அரங்கில் மொத்தம் 8000 இருக்கைகள் உள்ளன. இதில் பார்வையாளர்களுக்கு 5500 இருக்கைகள்,

விஐபிகளுக்கு 500 இருக்கைகள் என மொத்தம் 6000 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


லியோ வெற்றி விழாவுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தாத்தா (கவிதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்