தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

Sep 24, 2025,06:04 PM IST

சென்னை : டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் அநேகமாக தீபாவளிக்கு அது வெளியாகலாம் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. 


அதை விட முக்கியமாக இந்த முதல் பாடலை விஜய்யே பாடியிருப்பதாகவும் ஒரு பரபரப்பான விறுவிறுப்பும் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது.


ஹெச்.வினோத் இயக்கத்தில் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது தான் ஜனநாயகன் படம். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். விஜய் முழு நேரமாக அரசியலில் இறங்குவதற்கு முன் நடித்துள்ள படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.




விஜய்யின் 69வது படமாக உருவாகி உள்ள ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஷூட்டில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இதனால் படம் குறித்த அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்நிலையில் 2026ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்தது. 


ஜனநாயகன் படத்தில் விஜய் பேசிற அரசியல் பஞ்ச்களை கேட்க ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கையில் அரசியல் நிஜ அரசியலில் கலக்கி வருகிறார். இதையும் அவரது ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்படலாம் என்ற ஒரு தகவல் வெளியாகி உலா வருகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் கூட இதற்கு வாய்ப்பிருப்பதாக பலரும் கூறுகிறார்கள். 


வழக்கமாக விஜய் படங்களின் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவற்றை அவரது ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி, அதிக பார்வைகளை பெறுவதில் புதிய சாதனையே படைக்க செய்து விடுவார்கள். அந்த வகையில் இப்போது பர்ஸ்ட் சிங்கிளுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்தப் பாடலை விஜய்யே பாடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை என்றாலும் கூட விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்