செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது... விஜய பிரபாகரன் ஷாக் பேச்சு!

Sep 27, 2024,04:11 PM IST

சென்னை:   செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது கொள்ளையர் கையில் சாவியை கொடுப்பது போல என்று விஜய பிரபாகரன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும் ஏற்கவில்லை. இதனால் ஜாமின் கிடைக்காமல் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார் செந்தில் பாலாஜி.




இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்த்தரவிட்டது. அதன்படி தினசரி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2 நபர் உத்தரவாதத்தின்பேரில் செந்தில் பாலாஜி ஜாமின் பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது. 


செந்தில் பாலாஜி நிபந்தனையில் வெளியில் வந்துள்ளதைக் கொண்டாடும் திமுகவை முன்னாள் ஆளுனர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது  தேமுதிக கட்சியை சேர்ந்த விஜய பிரபாகரனும் இதை விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்தா ஜெயிலுக்கு போனார். தப்பு செய்து தான் ஜெயிலுக்கு போனார். 


100க்கணக்கான பெயில் மனுக்களைத் தாண்டி இன்றைக்கு தான் அவருக்கு விடுதலை கிடைத்துள்ளது. இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக்கூடாது. செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது கொள்ளையர் கையில் சாவியை கொடுப்பது போல. திமுக அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள் என்றால், அவர்களுக்குள் ஏதோ ஒரு டீலிங் உள்ளது போன்று தான் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்