விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி. அன்புமணியை அவர் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
20 சுற்றுகள் முடிவில், திமுக வேட்பாளர் சிவா 1,24,053 வாக்குகளைப் பெற்று பிரமாண்ட வெற்றியை பெற்றார். பாமக வேட்பாளர் அன்புமணி 56,296 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றனர். திமுக விக்கிரவாண்டியில் இதுவரை 1 லட்சம் வாக்குகளைப் பெற்றதில்லை. முதல்முறையாக அந்த இலக்கைத் தொட்டுள்ளது. அந்த வகையில் இது திமுகவுக்கு பிரமாண்டமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் பாமக வேட்பாளர் அன்புமணி தொகையை தக்க வைக்கத் தேவையான வாக்குகளைப் பெற்று விட்டதால், அவருக்கு டெபாசிட் தொகை மீண்டும் கிடைக்கும். அதேசமயம், கடந்த 2021 தேர்தலை விட சற்று கூடுதலான வாக்குகளையும் பாமக பெற்றுள்ளது அந்தக் கட்சிக்கு சற்றே ஆறுதலான விஷயம்.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றி வித்தியாசம் 9573 ஆக மட்டுமே இருந்தது. இந்தத் தேர்தலில் அதை விட பல மடங்கு அதிகமான வித்தியாசத்தில் திமுக பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் 8216 ஆகும். இந்த முறை அதை விட கூடுதலான வாக்குகளை அது பெற்றுள்ளது. இருப்பினும் பெரிய தாக்கத்தை நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலிலும் ஏற்படுத்தத் தவறி விட்டது. அக்கட்சிக்கு டெபாசிட் கிடைக்கவில்லை.
முன்னதாக விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 10ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. 29 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}