சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனலின் தாத்தாவுக்கு உடம்புக்கு முடியவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"இன்னைக்கு ஒரு புடி" இந்த வார்த்தையை யாரும் மறந்திருக்க முடியாது. வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவின் குரல் தான் இது. இந்த குரலும் இந்த டீமும் செய்யும் சமையலும் அவர்கள் போடும் வீடியோக்களும் மிக பிரபலமானவை. உலகத் தமிழர்கள் அத்தனை பேரையும் மயக்கிய சமையல் குழு இந்த youtube வில்லேஜ் குக்கிங் சேனல்.

கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில், கரூர் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோதிமணியின் முயற்சியால் ராகுல் காந்தி இந்தக் குழுவினருடன் கலந்து கொண்டு சமையலில் கலந்து கொண்டு அசத்தினார். இந்த குழுவை சேர்ந்த தாத்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதாவது இதயக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்த குழுவை சேர்ந்த சுப்ரமணியன் வேலுச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், தாத்தா இருதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்து விட்டு, தாத்தாவுக்கு என்னாச்சு என்று மக்கள் பதறிப் போய் விசாரித்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர் அருமையான முறையில் குணமடைந்து வருவது போன்ற ஒரு புகைப்படத்தையும் சுப்பிரமணியன் வேலுச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தாத்தாவுக்கு பலரும் வாழ்த்து கூறுகின்றனர். சீக்கிரம் ஜம்முனு எழுந்து வாங்க இன்னைக்கு ஒரு புடி அப்படிங்கற அந்த குரலுக்காக காத்துட்டு இருக்கோம் அப்படின்னு சொல்லி எல்லா பேருமே வந்து சந்தோஷமா தாத்தா வாழ்த்திட்டு இருக்காங்க.
நாமளும் தாத்தா விரைவில் நல்ல குணமடைந்து மறுபடியும் செம்மையாக சமையலில் குதிக்க வேண்டும், விதம் விதமாக சமைத்து மக்களுக்குப் பரிமாற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வோம்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}