- வ. சரசுவதி
தைத் திருநாள் நகரங்களில் எப்படியோ, ஆனால் கிராமங்களில் இது மிகப் பெரிய ஒரு நிகழ்வு. இதற்கென்று சில மரபுகளையும் கிராமங்களில் கடைப்பிடிக்கிறார்கள். அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
மொச்சைக்காய், பூசணிக்காய், கரும்பு, பீளைப்பூ, ஆவாரம் பூ மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை கிராமத்து தைத் திங்கள் பெருநாளில் முக்கியமானவை. இவை இடம்பெறுவதன் முக்கியத்துவம் இதோ.
கிராமத்து தைத்திருநாள் – இயற்கையுடன் கொண்ட உறவு

மொச்சைக்காய் - மண்ணின் மடியில் இருந்து முதலில் சிரிக்கும் காய். புது தொடக்கம், புது நம்பிக்கை
என்று சொல்லும் அறுவடை செய்தி.
பூசணிக்காய் - பெரிதாய் வளர்ந்து விதைகளால் நிரம்பியது.உறவுகள் அனைவரும் பகிர்ந்து உண்ணக்கூடிய காய்.
தீமை விலக, வளம் பெருக என்ற நிறைவு சின்னம்.
கரும்பு - வெயிலில் வளர்ந்து இனிப்பை மறைத்து வைத்தது. உழைப்பின் இனிமை, வாழ்க்கையின் நீளம்
என்ற ஆசீர்வாதம்.
பீளைப்பூ - அலங்காரம் இல்லாத பூ. திருஷ்டி, தீய பார்வை விலக்கும் காவல்என்று நம்பிய மரபு.
ஆவாரம் பூ - மென்மையான மணம், மருத்துவ குணம். நலம், சாந்தம், மன–உடல் தூய்மை என்ற வேண்டுதல்.
ஜல்லிக்கட்டு - கிராமத்து இளைஞர்களின் வீர விளையாட்டு.
இவை எல்லாம் சேர்ந்து சொல்வது கிராமத்து தைத்திருநாள். தைத்திருநாள் என்பது ஒரு பண்டிகை அல்ல—
மண்ணுக்கும், உழைப்புக்கும், இயற்கைக்கும்,இளைஞர்களின் வீரத்திற்கும் நன்றி சொல்வது. அதனால் தான்,
இந்த காய்–பூக்கள் உணவாகவும், காப்பாகவும், வாசல் அலங்காரமாகவும்,வீரவிளையாட்டாகவும் கிராமத்து வாழ்க்கையில் முக்கியம் பெற்றன.
இந்த தைத்திருநாளில் அனைத்தையும் அனுபவித்து மகிழ்ச்சியடைய அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள்
வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!
என் இராமனே!
கொழுக்கட்டை
ஆண் பூ
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
{{comments.comment}}