சண்டிகர்: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் பேட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஹரியானாவில் கடந்த 10 வருடமாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆட்சிக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருப்பதால் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. வேட்பாளர்களை தெளிவாக தேர்வு செய்து நிறுத்தியுள்ளது.
கூட்டணி அமைக்கவும் காங்கிரஸ் முன்றது. ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. இதனால் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுகின்றன. பாஜகவுக்கு எதிராக டெல்லியில் போராடிய மல்யுத்த வீரர்களையும் தேர்தல் களத்தில் காங்கிரஸ் களம் இறக்குகியது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.சி வேணுகோபால் முன்னிலையில், பஜ்ரங் புனியா மற்றும் போகத் இருவரும் இணைந்தனர்.
தற்போது வினேஷ் போகத் ஹரியானா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். 31 வேட்பாளர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். அதில் ஜூலானா பேரவைத் தொகுதியில் வினேஷ் போகத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}