விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். காரணம் இது வனப் பகுதியில் இருப்பதால். தினமும் இங்கு சாமி தரிசனம் செய்ய முடியாது மாதத்திற்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என 8 நாட்களுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி அளித்துள்ளது வனத்துறை.
கடந்த 2 மாதங்களாக கன மழை காரணமாக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் தாக்கம் குறைந்ததால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்கழி 1ம் தேதி மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதி அளிக்கப்பட்டிருந்து. அப்பொழுதும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று பிரதோஷம் என்பதாலும், அடுத்து பவுர்ணமி வர உள்ளதாலும் இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தை மாத பிரதோஷம் என்பதால் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. அபிஷேகத்திற்கு பின்னர் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. வருகின்ற 26ம் தேதியுடன் 4 நாட்களுக்கான அனுமதி முடிவடைகிறது.
சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதே போல 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. இங்கு இரவில் தங்கக்கூடாது. அருகில் உள்ள ஓடைகளிலும் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பிற்காகவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த 4 நாட்களும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!
அரங்கன் யாவுமே அறிந்தவனே!
அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து
தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
{{comments.comment}}