சிந்திக்க வேண்டிய விஷயம்....!

Nov 25, 2025,10:51 AM IST

- இரா.மும்தாஜ் பேகம்


வீட்டில் வளர்த்த மாடு செத்தா கூட ஊரு சனமே போய் விசாரிச்சுட்டு வந்தது ஒரு காலம்...  

இப்போ மனுஷன் செத்தாக்கூட விசாரிக்க ஆள் இல்லா  சூழ்நிலைதான் அதிகமாக உள்ளது...!!


செருப்பாக உழைத்தாலும் சேமித்து வைக்கப் பழகுங்கள் ....

வாழ்க்கை அறுந்தால் தைப்பதற்கு நிச்சயம் உதவும்...!!


நேர்த்தியான குற்றங்கள் ஒரு போதும் குற்ற உணர்வுகளை கொண்டு வருவதில்லை ....

எலிக்கு விஷம் வைத்துக் கொல்வதைப் போல...!!




உச்சந்தலையில் இருந்தால் சிகை என்று 

சிங்காரம் செய்வதும்....

உதிர்ந்து விழுந்தால் 

மயிரு என்று மட்டமாக 

பேசுவதும்  மனிதர்களின் இயற்கை குணம்....!!


கஷ்டத்தின் அளவுக்கு ஏற்ப...

மனிதர்களிடம்

பக்தியின் அளவும் கூடுகிறது...!!


சூரிய கிரஹணம்

சந்திர கிரஹணம்

பிடிக்கும்....

விட்டு விடும்... 

ஆனால் பணக்  கிரஹணம் மட்டும் பிடித்தால் விடவே விடாது...!!


இறக்கும் போது

நமது பாவ, புண்ணியங்களின் கையிருப்பு

எதுவோ அதுதான்... 

நமது தலைமுறையின் தலையெழுத்து...!!


விலங்குகளிடம் கூட பழக்கம் வைத்துக் கொள்ளலாம்... 

ஆனால் சில மனிதர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ளத்தான் பயமாக இருக்கிறது...!!


விபத்தில் தொண்ணூறு பேர் இறந்து பத்து பேர் காப்பாற்றப்பட்டால்..  அந்த பத்து பேரையும் கடவுள் காப்பாற்றி விட்டார் என்று சொல்லும் நாம்... இறந்த தொண்ணூறு பேரை கடவுள் ஏன் காப்பாற்றவில்லை என்று ஒரு போதும் கேட்பதில்லை...!!


திருமணம் செய்யும்போது சந்தோசமாக வாழ வேண்டும் என நினைக்கும்...  ஆண்கள்... பெண்கள்... 

திருமணத்திற்கு பின் தன் பிள்ளைகளின்  சந்தோஷத்திற்காக வாழ்ந்தால் போதும் என மாறி விடுகிறார்கள்..!!


நமக்கு பிடித்தவர் சூழ்ச்சி செய்து வென்றால்  கிருஷ்ணராக பார்ப்பதும் ...

நமக்கு பிடிக்காதவர் சூழ்ச்சி செய்து வென்றால்  சகுனியாக பார்ப்பதும் மனிதனின் மாறாத குணங்களில் ஒன்று...!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்