சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தெற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் இன்று முதல் 6 தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ,சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,தேனி, திண்டுக்கல் ,மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
அத்துணை அழகா புன்னகை.... ?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
குழந்தைகளைக் கொண்டாடுவோம்.. வெறும் பேச்சளவில் இருந்தால் எப்படி...??
பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் ஏன் விரும்புவதில்லை?
அதிர்ஷ்டம்
விஷால் தொடர்ந்த அப்பீல் மனு.. விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் மறுப்பு.. வேறு பெஞ்சுக்கு பரிந்துரை
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
{{comments.comment}}