வார இறுதி நாட்கள்: சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

May 14, 2025,05:44 PM IST

சென்னை: முகூர்த்தம், வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கப்படுகின்றன.


தொடர்விடுமுறைகள் என்றாலே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், பேருந்து நிலையிங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதற்காக போக்குவரத்து துறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வந்தாலும், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், முகூர்த்தம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு மே 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.




இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில், வரும் மே 16 முகூர்த்தம் மே 17 சனிக்கிழமை மற்றும் மே 18 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து, இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்து கூடுதலான பயணிகள் தமிழக முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.


சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயமுத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மே 16 வெள்ளிக்கிழமை அன்று 570 பேருந்துகளும், மே 17 சனிக்கிழமை 605 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடத்திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு  ஆகிய இடங்களுக்கு மே 16 வெள்ளிக்கிழமை அன்று 100 பேருந்துகளும், மே 17 சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்தில் இருந்து மே 16 அன்று 24 பேருந்துகளும் மே 17 அன்று 100 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.


மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்