போர்ட் ஆர் ஸ்பெயின்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சந்தித்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வாவின் தாயார் கரோலின், அவரைக் கட்டிப்பிடித்து கண் கலங்கினார்.
இருவரும் பகிர்ந்து கொண்ட அந்த பாசமான நிமிடங்கள் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்தியா மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் டெஸ்ட்டை ஏற்கனவே இந்தியா வென்று விட்டது. தற்போது 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலி அபாரமான சதம் அடித்து அசத்தியுள்ளார். இதை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வரும் நிலையில் விராட் கோலியின் இன்னொரு பாசமான முகமும் வெளிப்பட்டு அதையும் ரசிகர்கள் டபுள் தமாகா"வாக கொண்டாடிக் கொண்டுள்ளனர்.
விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோசுவாவுக்கும் இடையிலான பேச்சு விவரம், ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி அது வெளியானது. ஜோசுவா எந்த அளவுக்கு விராட் கோலி மீது அன்பும், மரியாதையும், பாசமும் கொண்டுள்ளார் என்பது மட்டுமல்லாமல் அவரது குடும்பமே விராட் கோலியின் ரசிகர்கள் என்பதும் தெரிய வந்தது.
ஜோசுவா விராட்டிடம் பேசும்போது, எனது தாயார் போட்டி முடிவில் உங்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார். மேலும் உங்களைப் பார்ப்பதற்காகவே ஸ்டேடியத்திற்கும் வருவதாக கூறியுள்ளார். எனது தாயார் உங்களது மிகப் பெரிய ரசிகர் என்று கூறினார். இதைக் கேட்டு விராட் கோலி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
சொன்னது போலவே ஜோசுசவாவின் தாயார் கரோலின் ஸ்டேடியம் வந்திருந்தார். விராட் கோலி சதம் அடித்ததையும் அவர் பார்த்து ரசித்தார். இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 121 ரன்களைக் குவித்தார். ஆட்டம் முடிந்து வீரர்கள் வெளியே வந்தபோது அங்கு விராட் கோலியைச் சந்திக்க கரோலின் காத்திருந்தார். டீம் பஸ்ஸில் ஏற விராட் கோலி வந்தபோது கரோலின் இருந்ததைப் பார்த்து அவரிடம் வேகமாக வந்து கை குலுக்கினார் கோலி. அவரை கரோலின் பாசத்துடன் கட்டி அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். மிகவும் உருக்கமாக இருந்தது அந்த சந்திப்பு. இருவரும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். கரோலின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் கரோலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, விராட் கோலி நமது காலத்தின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவரை சந்தித்தது எனக்கு பெருமையாகவும், கெளரவமாகவும் உள்ளது. நான் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகை. விராட் கோலி விளையாடும் அதே மைதானத்தில் எனது மகனும் இருக்கிறான் என்பதை பெருமையாக கருதுகிறேன் என்றார் அவர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}