சென்னை: அரசியலில் குதிக்கப் போவதாக எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஷால், ஏன் திடீரென அதிலிருந்து பின்வாங்கினார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் உண்மையில் அரசியலில் இணையும் திட்டத்தில்தான் இருந்துள்ளதாக உறுதியாக சொல்கிறார்கள். கடைசி நேரத்தில் அவரது முடிவு மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் முதல் தற்போதைய விஜய் வரையில் பல்வேறு திரை பிரபலங்கள் அரசியலில் குதிப்பது ட்ரெண்டாகி வருகிறது. எல்லோருக்கும் ஒரே கனவுதான்.. "எம்ஜிஆர்" ஆகி விட வேண்டும் என்பதே.. ஆனால் எம்ஜிஆர் இடம் இன்னும் அப்படியே காலியாகத்தான் உள்ளது.
லேட்டஸ்டாக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். இதையடுத்து விஷால் வரப் போவதாக ஒரு செய்தி கிளம்பியது. ஏற்கனவே நடிகர் விஷால் அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி ஆகிவிட்டது.
பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வந்த நடிகர் விஷால் சமீப காலமாக மக்களைச் சந்தித்து வருகிறார். நிறைய ஊர்களுக்கு உதவிகள் செய்துள்ளார். அதை வீடியோவாகவும் அவரது மக்கள் நல இயக்கம் வெளியிட்டு வந்தது. இதெல்லாம் அவரது அரசியல் ஆசையின் வெளிப்பாடு என்றே பலரும் பார்த்து வந்தனர். இந்த நிலையில் இன்று அவர் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளரை நியமித்துள்ளார் விஷால். பூத் கமிட்டி அளவுக்கு அமைப்புகளையும் உருவாக்கியுள்ளார். புதிய கட்சியை ஆரம்பிக்கும் நோக்கில்தான் விஷால் நற்பணி மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம் எனவும் அவர் மாற்றியதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி விட்டார்.
மக்கள் நலப் பணிகள் தொடரும்.. எதிர்காலத்தில் "இயற்கை" வேறு பாதையில் தன்னை போகக் கூறினால், மக்களுக்காக குரல் கொடுக்கத் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார் விஷால். எனவே இப்போதைக்கு அரசியலுக்கு வரவில்லை என்பதே அவரது அறிக்கையின் சாராம்சமாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் வாய்ப்பு வந்தால் வர தயங்க மாட்டேன் என்றுதான் அவர் மறைமுகமாக சொல்லியுள்ளதாகவும் கருதப்படுகிறது.
விஜய்க்கு பல முனைகளிலும் ஆதரவு அதிகமாக காணப்படுகிறது. விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பெரிய அளவில் எங்குமே எதிர்ப்பு இல்லை. பலரும் விஜய் வருகையை ஆவலுடன் வரவேற்றுள்ளனர். ஒரு பாசிட்டிவான பேச்சுதான் எல்லாப் பக்கமும் உள்ளது. இதனால் இந்த நேரத்தில் நாமும் உள்ளே புகுந்தால், சரிப்படாது என்று தோன்றியதால் விஷால் பின்வாங்கினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சற்று பொறுத்திருந்து, சரியான தருணம் வரும்போது உள்ளே புகுந்து கொள்ளலாம் என்ற திட்டத்தில் விஷால் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
{{comments.comment}}