சென்னை: தமிழ்நாட்டிலிருந்து 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடையும் நிலையில் அவர்களுக்குப் பதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலையில் நடைபெறும் தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டு எம்.பி ஆகவுள்ளார் என்பதால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து 6 ராஜ்யசபா எம்பிக்கள் மற்றும் அஸ்ஸாமிலிருந்து 2 பேர் என மொத்தம் 8 எம்பிக்களின் பதவிக்கலாம் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது. தமிழ்நாட்டு எம்.பிக்களின் பதவிக்காலம் ஜூலையுடன் முடிவடையவுள்ளது.
இந்த ஆறு பேரில் 3 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதாவது பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோரே அவர்கள். மதிமுக சார்பில் வைகோ, பாமக சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அதிமுக சார்பில் என்.சந்திரசேகரன் ஆகியோர் மற்ற எம்.பிக்கள்.
ஓய்வு பெறும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
கடந்த 2019ம் ஆண்டு இந்த ஆறு பேரும் எம்.பி. ஆனார்கள். அப்போது அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. அதிமுகவுக்கு அப்போது 2 எம்.பிக்களைத் தேர்வு செய்ய பலம் இருந்தது. இதனால் தனது கட்சி சார்பில் சந்திரசேகரனையும், பாமகவுக்கு ஒரு சீட்டையும் அது ஒதுக்கியது. பாமக சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா எம்.பி. ஆனார். தற்போது பாமக, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதனால் மீண்டும் எம்.பி. ஆகும் வாய்ப்பை இழக்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
ஒருவேளை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதிமுக கூட்டணிக்கு பாமக வந்திருந்தால் மீண்டும் எம்.பி. ஆகும் வாய்ப்பு அன்புமணிக்குக் கிடைத்திருக்கலாம். அந்த வாய்ப்பு கைநழுவிப் போய் விட்டது. வருகிற ஜூலை மாதத்திற்குப் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாமகவுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையும் ஏற்படவுள்ளது.
தற்போது அதிமுக சார்பில் இரு எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அந்த இருவரும் புதியவர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது. அதில் ஒருவர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், இன்னொருவர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது விரைவில் தெரியலாம்.
பிரேமலதா விஜயகாந்த்தின் தீவிர முயற்சி
மறுபக்கம், அதிமுகவிடமிருந்து ஒரு எம்.பி. சீட்டைப் பெற தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக முயல்வதாக தெரிகிறது. நீண்ட காலமாகவே ராஜ்யசபா சீட்டுக்காக முட்டி மோதி வருகிறது தேமுதிக. எந்தக் கூட்டணியில் அது இணைந்தாலும் சட்டசபை தொகுதிகளோடு ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற கோரிக்கையையும் நிரந்தரமாக வைத்து வரும் கட்சி தேமுதிக.
கடந்த லோக்சபா தேர்தலின்போதும் கூட அது அதிமுகவிடம் ராஜ்யசபா சீட்டைக் கோரியிருந்தது. ஆனால் எழுத்துப்பூர்வமாக அதிமுக எந்த உறுதியையும் அப்போது அளிக்கவில்லை. இதனால் பிரேமலதா அப்செட்டானார். இருப்பினும் உரிய முடிவு எடுப்போம் என்று அதிமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது காலியாகும் 2 பதவிகளில் ஒன்றை தங்களுக்குத் தர வேண்டும் என்று தேமுதிக தரப்பில் அதிமுகவிடம் இப்போதிருந்தே வலியுறுத்தப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். ஆனால் அதிமுக சீட் தருமா என்பது கேள்விக்குறி என்று சொல்கிறார்கள். ஒரு வேளை அதிமுக சீட் கொடுத்தால் அந்த சீட்டில் தேமுதிக சார்பில் சுதீஷ் போட்டியிடுவாரா அல்லது விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை.
கமல்ஹாசனுக்கு வாய்ப்பு
மறுபக்கம் திமுக கூட்டணியில் தற்போது ஓய்வு பெறவுள்ள 3 பேரில் அப்துல்லா மற்றும் பி. வில்சன் ஆகியோருக்கு மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்னொருவரான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சண்முகத்துக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை. அவருக்குப் பதில் தொமுசவிலிருந்து வேறு ஒருவருக்கு டிக்கெட் கிடைக்கலாம்.
4வது சீட் வைகோ. அவருக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. அவருக்குப் பதில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அந்த இடத்தில் நிறுத்தப்படலாம். காரணம், கடந்த லோக்சபா தேர்தலின்போதே கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக உடன்படிக்கை செய்து கொண்டது திமுக. லோக்சபா தேர்தலில் கமல்ஹாசனுக்கு சீட் தரப்படவில்லை. மாறாக, ராஜ்யசபா சீட் மட்டும் ஒதுக்கியது திமுக. அந்த இடத்தில்தான் வருகிற ஜூலையில் நடைபெறும் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளார்.
எல்லாம் சரியாகப் போனால், வருகிற ஆகஸ்ட் மாதத்திலிருந்து கமல்ஹாசன் எம்.பியாக வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்
Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா
C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!
பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?
போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!
பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?
விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்
சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!
{{comments.comment}}