டெல்லி: நாசா விண்வெளி நிறுவனம் சார்பில், இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு இறுதியில், சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று நாசா நிறுவன தலைவர் பில் நெல்சன் கூறியுள்ளார். அது பிரதமர் நரேந்திர மோடியாக இருக்கலாமா என்று அவரிடமே செய்தியாளர்கள் கேட்டபோது, ஏன் கூடாது என்று பதிலளித்துள்ளார் நெல்சன்.
அமெரிக்காவின் நாசா அமைப்பின் தலைவர் பில் நெல்சன் டெல்லிக்கு வந்துள்ளார். அவர் என்டிடிவிக்கு அளித்த ஒரு பேட்டியில்தான் நரேந்திர மோடி விண்வெளி வீரராக செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்சன் கூறுகையில், அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியர் ஒருவரை தேர்வு செய்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைப்போம் என்றார். அப்போது செய்தியாளர், பிரதமர் நரேந்திர மோடியால் விண்வெளி வீரராக செல்ல முடியுமா என்று கேட்டபோது, ஏன் முடியாது.. விண்வெளி மீதான ஆர்வம் கொண்டவர்தான் பிரதமர் மோடி. நானே அரசியல்வாதியாக இருந்தபோது விண்வெளி வீரராக சென்றவன்தான்.

\எந்த ஒரு அரசியல்வாதிக்கும் விண்ணில் பயணம் செய்வது என்பது அருமையான அனுபவமாக இருக்கும். குறிப்பாக ஒரு நாட்டின் தலைவராக இருக்கும் ஒருவருக்கு நிச்சயம் அந்த விருப்பம் இருக்கவே செய்யும். விண்வெளியிலிருந்து பார்த்தால் எதற்குமே எல்லையே கிடையாது. அங்கு அரசியல் கிடையாது, மதங்கள் கிடையாது, இனப்பாகுபாடு கிடையாது.. பூமியின் குடிமகன் மட்டுமே அங்கு தெரிவார்.
நிலவில் மனிதர்கள் வசிக்கும் சாத்தியக் கூறுகள் குறித்த ஆர்டிமிஸ் திட்டத்தில் இந்தியா ஆக்கப்பூர்வமாக பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு தயாராக முடியும் என்றார் அவர்.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}