சென்னை: இனி கார் வாங்குபவர்கள் பார்க்கின் இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கார் இருந்தால் தான் கெத்து என்ற மனநிலையில் பலரும் பெருமைக்காக கார் வாங்குகின்றனர். முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு கார்கள் வாங்கும் காலம் மலையேறிப் போய் தற்போது தனி நபர்கள் உபயோகத்திற்காக தனித்தனி கார்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், ஒரு வீட்டில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று கார்கள் வரை வைத்துள்ளனர். இப்படி அதிகமாக கார் வைத்துள்ளதால், சென்னையில் மொத்தம் எவ்வளவு கார்கள் இருக்கிறது என்பதை தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 92 லட்சம் கார்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதில், 14,000 கார்கள் மட்டுமே பொதுப் பார்க்கிங்கில் நிறுத்த இட வசதி உள்ளது. மற்ற கார்கள் அனைத்தும் இடவசதி இல்லாத காரணத்தால் சாலைகளிலும் தெருக்களிலும் நிறுத்தி வைக்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப வாகனம் பெருக்கமும் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து ஆணையம் ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது கார் வாங்குவோர் பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றுகளை கட்டாயமாக இணைக்க வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!
நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்
தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!
கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!
2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
விஜய்யுடன் கை கோர்த்த செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு குட்பை சொன்ன தவெக!
செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்
உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
108 ஆம்புலன்ஸ் அவசர எண் மாற்றம் - புதிய எண்கள் அறிவிப்பு.. மக்களே நோட் பண்ணிக்குங்க!
{{comments.comment}}