திருவள்ளுவர் தின விருதுகள்.. 9 பேருக்கு விருதுகள்.. ஜனவரி. 15ம் தேதி சென்னையில் வழங்கப்படும்

Jan 05, 2025,02:46 PM IST

திருவள்ளுவர் திருநாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 9 விருதுகளுக்குரிய பிரமுகர்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024-ஆம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பேரறிஞர் அண்ணா விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய 9 விருதுகளுக்குரிய பிரமுகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்