சென்னை: தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் பரவலாக மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இரவு 7 மணி வரையிலான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}