- சசிகலா விஸ்வநாதன்
அலைபேசி சிணுங்க; கணவர் காசிநாதனின் முறைப்பை அலட்சியம் செய்த ஒப்பனையம்மா; ஓடோடிச் சென்று அலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தாள்.
"ஏம்மா! ரெண்டு தரக்கா " ஃபோன் போட்டுருக்கே! அங்கிட்டு எல்லாரும் நல்லா தானே இருக்கீங்க" என்று கேட்டவனின் பேச்சை பாதியில் மறித்தாள்; ஒப்பனையம்மா.
இல்லேடா! குமரா! ஏது கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய், கணக்கிலே வரவு வெச்சுருக்காங்க பாங்க் பொஸ்தகத்துலே. கூடுதலாக பணம் அனுப்பி யிருக்கியா? சந்தோசம்" என்று மகிழ்ச்சியுடன் சொன்ன அம்மாவுக்கு, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு கீழே போய்க்கொண்டு இருப்பதை எப்படி விளக்குவது; என்று தெரியாமல் , விழித்தான் பாஸ்டனில் வேலை பார்க்கும் குமரன்.

சடாட்சரம், ஓப்பனையம்மாவின் அறியாமை கண்டு தலையில் அடித்துக் கொண்டு, "அவளுக்கு பத்து வாட்டி விளக்கியாச்சு. விடு; அத்தோடு. சந்தோச பட்டு கிடட்டும்" என்றார் மகனிடம்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
Short Story: சிவகங்கை சீமைக்காரி!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
தூரத்து நிலவே... ஒளியைத் துப்பியது... இரவு!
ராமாசாரி வாரிசு!
பூவ பூவ பூவே.. மனதை அமைதியாக்கும்.. மன அழுத்தத்தை மட்டுப்படுத்தும் பூக்கள்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
கூரைவீடு !
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
{{comments.comment}}