Come on CM lets go on the Bulletu.. புல்லட் ரயிலில் டோக்கியோவுக்குப் போன ஸ்டாலின்!

May 28, 2023,04:02 PM IST
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் புல்லட் ரயிலில் பயணித்து ஒசாகா நகரிலிருந்து டோக்கியோ சென்றடைந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். முதலில் 2 நாட்கள் அவர் சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு பல்வேறு தொழில்முதலீடுகள் தொடர்பாக தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் ஜப்பானின் ஒசாகா நகருக்குச் சென்றார்.




ஒசாகா நகரில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது டோக்கியா போயுள்ளார். ஒசாகா நகரிலிருந்து அவர் புல்லட் ரயில் மூலம் டோக்கியோ பயணமானார். இளைஞர்களுக்கு சவால் வடும் வகையில் டிப் டாப்பாக டிரஸ் செய்து கொண்டு ஹேன்ட்சம்மாக காணப்பட்டார் ஸ்டாலின்.

இதுதொடர்பாக ஸ்டாலின் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்து விடுவோம்.




உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் #BulletTrain-களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என்று கூறியிருந்தார் மு.க.ஸ்டாலின்.

டோக்கியோ வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய துணைத் தூதர் சிபி ஜார்ஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்