பிரிட்டன் மன்னராக முடிசூட்டப்பட்டார் 3 ம் சார்லஸ்.. .உலகமே வியந்த பிரம்மாண்ட விழா

May 06, 2023,04:53 PM IST
லண்டன் : பிரிட்டன் மன்னராக 3 ம் சார்லஸ் முடிசூட்டிக் கொண்ட விழா இன்று நடைபெற்றது. இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.  பாரம்பரியம் மிக்க பகிம்ஹம் அரண்மனையில் இந்த பிரமாண்ட விழா நடைபெற்றது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் முடிசூட்டு விழா நடைபெற்றது. பிரிட்டன் மன்னரின் முடிசூட்டு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இளவரசர் ஹாரியும் அவரது மனைவியும் இந்த விழாவில் கலந்து கொண்டார். இந்திய அரசு சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். இந்த விழாவில் 2000 க்கும் அதிகமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 



பிரிட்டனில் கிட்டதட்ட 70 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மிக ஆடம்பரமான விழா இது தான். இந்த விழாவை பிரிட்டன் நகர வீதிகளில் அங்குள்ள மக்களும், உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் டிவிகளிலும் பார்த்து மகிழந்தனர். இதற்கு முன் இளவரசி டயானா - சார்லசின் திருமணம், டயானாவின் இறுதி ஊர்வலம் ஆகியவற்றையே இவ்வளவு அதிகமானவர்கள் பிரிட்டனில் இருந்து ஒளிபரப்பான நேரடி நிகழ்வினை கண்டு ரசித்தனர்.  

பிரிட்டன் மன்னராக 3 ம் சார்லசும், பிரிட்டன் ராணியாக காமிலாவும் முடிசூட்டிக் கொண்ட இந்த விழாவில் அரசு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். இரண்டாம் எலிசபெத் மரணம், இளவரசர் ஹாரியும் அவரது மனைவியும் அரசு குடும்பத்தையும் அரண்மனையையும் விட்டு விலகி இருப்பது போன்ற அரசு குடும்பத்தில் சமீபத்தில் நடந்த பல மாற்றங்களால் 70 வயதில் பிரிட்டனின் மன்னராக 3ம் சார்லசிற்கு முடிசூட்ட முடிவு செய்யப்பட்டது. 70 வயதில் முடிசூட்டிக் கொள்வது அரசு குடும்பத்தில் ஒன்றும் புதிதல்ல. இரண்டாம் எலிசபெத்தும் தனது 70 வது வயதில் தான் ராணியாக முடிசூடினார்.

அரண்மனையை விட்டு வெளியேறினாலும் இளவரசர் ஹாரி, தனது தந்தையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக அனைவரையும் வியக்க வைத்து, கவனத்தை ஈர்த்துள்ளது.



முன்னதாக உலக நாடுகளின் தலைவர்கள் வரிசையாக சர்ச்சுக்கு அணிவகுத்து வந்தனர். அதைத் தொர்ந்து மன்னர் சார்லஸ், ராணி கமீலா ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். பின்னர் பைபிள் மீது சார்லஸ் உறுதிமொழி ஏற்றார். அப்போது, உறுதிமொழி அளித்த அனைத்தையும் நான் நிச்சயம் கடைப்பிடிப்பேன், நிறைவேற்றுவேன். அதற்கு எனக்கு உதவு கடவுளே என்று கூறி பைபிளை முத்தமிட்டார்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசினார். தொடர்ந்து பாடல்கள் பாடப்பட்டன. அதன் பின்னர் மன்னரின் சாதாரண உடை அகற்றப்பட்டு தங்க அங்கி அணியப்பட்டது. தொடர்ந்து சார்லஸிடம் வீர வாள் ஒப்படைக்கப்பட்டது. இறுதியாக செங்கோலை கையில் தாங்கிப் பிடித்த நிலையில், 3ம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடி சூட்டப்பட்டார். அவருக்கு எட்வர்ட் கிரீடம் சூட்டப்பட்டது.


சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்