சென்னை: கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்கவுள்ள விழாவில்க லந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா முதல்வராக பதவியேற்கவுள்ளார் சித்தராமையா. இன்று இரவு அவரை முறைப்படி சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கவுள்ளனர். அதன் பின்னர் அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு முதல்வராக அவர் பதவியேற்றுக் கொள்வார். துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்பார்.
இந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்��ள் உள்ளிட்டோர் வருகை தரவுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கும் அழைப்பு போயுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் விழாவுக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த பதவியேற்பு விழா மிகப் பெரிய அளவில் அமையவுள்ளது.
சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது.தனிப் பெரும்பான்மை பலத்துடன் அது ஆட்சியமைக்கிறது. சித்தராமையா 2வது முறையாக முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். இதற்கு முன்பு முதல்வராக இருந்தபோது தனது முழுப் பதவிக்காலத்தையும் அவர் பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
{{comments.comment}}